பத்திரிகையாளர் ஜியா திரைக்கதை, வசனம் எழுதி ஜியா இயக்கியுள்ள குறும்படம் ‘கள்வா.’ மர்யம் தியேட்டர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் யூ டியூபில் வெளியாகவிருக்கிறது.
முன்னதாக கொல்கத்தாவில் நடைபெறும் சர்வதேச சல்சித்ரா ரோலிங் திரைப்பட விருது விழாவில் சிறந்த திரில்லர், சிறந்த கதை, சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குநர் ஆகிய நான்கு பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது.

மட்டுமல்லாது கொல்கத்தாவின் 6-வது சர்வதேச பயாஸ்கோப் திரைப்பட விழாவில் சிறந்த தமிழ் படம், சிறந்த திரில்லர், சிறந்த ஒளிப்பதிவு ஆகிய 3 பிரிவுகளில் விருதுகளை வென்றிருக்கிறது.பக்கிங்கம்ஷெர் நாட்டிலுள்ள ஃபர்ஸ்ட் டைம் பிலிம் மேக்கர் செஷன் திரைப்பட விழா, மும்பை சர்வதேச குறும்பட விழா, சத்யஜித் ரித்விக் மிருணாள் சர்வதேச பட விழா, இங்கிலாந்து நாட்டின் லிஃப்ட் ஆஃப் பிலிம்மேக்கர் செஷன் திரைப்பட விழா, மான்செஸ்டரில் ஃபர்ஸ்ட் டைம் ஃபிலிம் மேக்கர் செஷன் என பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிட தேர்வாகிருக்கிறது. இன்னும் பல சர்வதேச பட விழாக்களிலும் ‘கள்வா’ கலந்துகொள்ளவிருக்கிறது.
படம் பற்றி இயக்குநர் ஜியா, ‘இது ரொமான்டிக் திரில்லர் கதை கொண்ட படம். வழக்கமான குறும்படங்களிலிருந்து இது மாறுபட்டு, ஒரு திரைப்படம் போலவே இருக்கும். படத்தில் கருத்து எதுவும் சொல்லவில்லை. முழுக்க முழுக்க என்டர்டெயினர்தான். கள்வா என்றால் மனதை கொள்ளையடித்தவன் என்று பொருள். இது சங்க இலக்கியத்திலிருந்து எடுத்த தலைப்பு. இந்த கதைக்கு இந்த தலைப்புதான் சிறப்பாக இருக்கும் என்று எழுத்தாளர்கள் சுபாவும் தெரிவித்தார்கள். எழுத்தாளர் அப்சல் எழுதிய ‘ஹவுஸ் அரெஸ்ட்’ என்ற சிறுகதையின் மையக்கருவை எடுத்துக்கொண்டு திரைக்கதை எழுதியிருக்கிறேன்.
ஹீரோவாக ‘181’ உள்பட சில படங்களில் நடித்துள்ள விஜய் சந்துரு நடித்திருக்கிறார். மாடலும் குறும்பட நடிகையுமான அட்சயா ஜெகதீஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். நகைச்சுவை நடிகர் காக்கா கோபால் இதில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்” என்றார்.
படக்குழுவினர்:
கதை – அப்சல்
இசை – ஜேட்ரிக்ஸ்
ஒளிப்பதிவு – ஷரண் தேவ்கர் சங்கர்
எடிட்டிங் -பிரேம்