கரண்,வடிவேலு நடித்த ‘காத்தவராயன்’, கதிர், ஹனி ரோஸ் நடித்த ‘காந்தர்வன்’, கஸ்தூரி முக்கிய வேடத்தில் நடித்த ‘இ.பி.கோ 302′ உள்ளிட்ட படங்களை இயக்கிய சலங்கை துரை இயக்கும் படம் ‘கடத்தல்.’
உண்மையான கடத்தல் சம்பவத்தை தோலுரிக்கும் விதத்தில் உருவாகும் இந்த படத்தில் கதாநாயகனாக எம் ஆர் தாமோதர் அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக விதிஷா,ரியா ஆகியோர் நடிக்க சுதா,நிழல்கள் ரவி, சிங்கம் புலி, தமிழ்வாணன், ஆர்.ஜெயச்சந்திரன், ரவிகாந்த், ஆதி வெங்கடாச்சலம், க.சபாபதி, சந்தோஷ், மோகன் ரெட்டி, மாஸ்டர் தருண், பிரவீன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, ‘‘கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கு இக்கால இளைஞர்களே எடுத்துக்காட்டு. தாய், தந்தையர் எவ்வளவோ சொல்லியும் தவறான நண்பர்களுடன் சேர்ந்து தவறான செயல்களில் ஈடுபட்டு வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள்.
அப்படி தவறான நட்பால் தாயை மீறி செயல்படும் ஒரு இளைஞனின் கதை இது. இன்றைய இளைய தலை முறையினருக்கு இந்த படம் நிச்சயம் ஒரு பாடமாக இருக்கும்.
ஒரு முக்கியமான உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு காமெடி மற்றும் கிரைம் திரில்லர் சப்ஜெக்டில் உருவாக்கியிருக்கிறோம்.
படப்பிடிப்பு குற்றாலம், தென்காசி, திருநெல்வேலி, மதுரை, ஒசூர், சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. படம் ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது” என்றார்.
உருவாக்கத்தில் உறுதுணை:-
தயாரிப்பு – செங்கோடன் துரைசாமி
இணை தயாரிப்பு – எம் ஆர்தாமோதரன், ரமேஷ் விஜயசேகர்
ஒளிப்பதிவு – ராஜ்செல்வா
இசை – எம்.ஸ்ரீகாந்த்
பாடல்கள் – பாவலர் எழில்வாணன், இலக்கியன், சக்தி பெருமாள்
எடிட்டிங் – ஏ எல் ரமேஷ்
சண்டை பயிற்சி – குங்ஃபூ சந்துரு
நடனம் – ரோஷன் ரமணா
தயாரிப்பு மேற்பார்வை – மல்லியம்பட்டி மாதவன்.
நிழற்படம் – தஞ்சை ரமேஷ்
டிஸைன்ஸ் – விக்னேஷ் செல்வன்
மக்கள் தொடர்பு – மணவை புவன்