இரக்கமற்ற ‘கிங் ஆஃப் கோதா’ டீசரில் மன்னிக்கத் தெரியாத வன்முறையாளனாக மிரட்டும் துல்கர் சல்மான்!கொடூரனாக துல்கர் சல்மான்! மிரட்டும் ‘கிங் ஆஃப் கோதா’ டீசர்.

‘கிங் ஆஃப் கோதா’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. துல்கர் சல்மான் நடிக்கும் இந்த படத்தின் ஒவ்வொரு அறிவிப்பையும் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், தற்போது இரத்தம் தெறிக்கும், அதிரடியான டீசர் வெளியாகியுள்ளது.

டீசரில் கோதா மக்கள் அரசனைக் காண்பது போல் மொத்தமாக ஒதுங்கி துல்கர் சல்மான் காருக்கு வழி விடுகின்றனர். ஸ்டைலான பழம்பெருமை மிகுந்த மெர்சிடிஸ் காரில் ‘தி கிங்’ என்ற அடையாளத்துடன் துல்கர் சல்மான் வருவதைப் பார்க்கும்போது,  நம் மொத்த கவனமும் அவர் மேல் குவிகிறது. மன்னிக்கத் தெரியாத வன்முறையாளனாக, இரக்கமற்ற கொடூரனாக வசீகரிக்கும் தோற்றத்தில் மிரட்டுகிறார் துல்கர் சல்மான்.

 

 

‘கிங் ஆஃப் கோதா’ டீசர் கோதா மக்களின் வாழ்க்கையை காணும் ஆவலைத் தூண்டுகிறது. அறிமுக இயக்குநர் அபிலாஷ் ஜோஷி இயக்கியிருக்கும் இப்படத்தின்  இந்த டீஸர், நிச்சயமாகப் பார்ப்பவர் அனைவரிடத்திலும் ஒரு பேரதிர்வை ஏற்படுத்துவதுடன், திரைப்படத்தைப் பார்க்கும் ஆவலைத்  தூண்டுகிறது.  இப்படம் 2023 ஓணம்  பண்டிகை அன்று உலகமெங்கும் வெளியாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here