விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’யிலிருந்து சித் ஸ்ரீராம் – சின்மயி குரலில் இனிமையான காதல் மெலடி வெளியீடு!

விஜய் தேவரகொண்டா, சமந்தா, முரளி சர்மா, ஜெயராம் சச்சின் கெடகர், சரண்யா பிரதீப், வெண்ணலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘குஷி.’

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

இந்த நிலையில் படத்திலிருந்து ‘ஆராத்யா’ என்ற காதல் மெலடி பாடல் இப்போது வெளியாகியிருக்கிறது. இந்த பாடல் வெளியாவதற்கு முன் விளம்பரத்தில் உறுதியளித்தபடி, திருமணத்திற்கு பிறகு நாயகனுக்கும், நாயகிக்கும் இடையேயான மாயாஜால காதல் பாடலாக வெளிவந்துள்ளது.

 

இந்த பாடலை சித் ஸ்ரீராம், சின்மயி உள்ளிட்ட பாடகர்கள் பாடியுள்ளனர். ‘நீ என் சூரிய ஒளி.. நீயே என் நிலவொளி.. நீ வானத்தில் நட்சத்திரங்கள்.. இப்போது என்னுடன் வா உனக்கு என் ஆசை…’ என்ற அசத்தலான வரிகளுடன் பாடல் தொடங்குகிறது. நம்மை குஷியின் காதல் மண்டலத்திற்கு அழைத்துச் செல்கிறது.

விஜய் தேவார கொண்டா மற்றும் சமந்தாவின் கெமிஸ்ட்ரி இனிமையான மெட்டினைப் போலவே கவர்வதாக இருக்கிறது. ஒருவருக்கு ஒருவர் அன்பை வெளிப்படுத்த விரும்பும் அனைத்து காதலர்களுக்கும் இது ஒரு கீதமாக இருக்கும்.

‘ஹிருதயம்’ படத்தின் மூலம் புகழ்பெற்ற ஹே ஷாம் அப்துல்லா வஹாப் இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார். இதனை தமிழ் மற்றும் தெலுங்கில் சித் ஸ்ரீராம் மற்றும் சின்மயி ஆகியோர் பாடியுள்ளனர். படத்தின் இயக்குநர் சிவ நிர்வாணா தெலுங்கு பாடல்களை எழுத, மதன் கார்க்கி தமிழ் பாடல்களை எழுதி இருக்கிறார்.

இந்தி பதிப்பில் ஜூபின் நௌடியல் மற்றும் பாலக் முச்சல் ஆகியோர் பாடியுள்ளனர். கன்னட மதிப்பில் ஹரிசரண் சேஷாத்திரி மற்றும் சின்மயி ஆகியோர் பாடியுள்ளனர். மலையாள பதிப்பில் கே. எஸ். ஹரிசங்கர் மற்றும் ஸ்வேதா மோகன் ஆகியோர் பாடியுள்ளனர். ஒவ்வொரு பதிப்பிலும் உணர்வும், மந்திரமும் அப்படியே இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here