‘ஜோக்கர்’, ‘அருவி’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘கைதி’ என மாபெரும் வெற்றிப் படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ இப்போது தயாரிக்கும் படம் ‘கண்ணி வெடி.’
அறிமுக இயக்குநர் கணேஷ்ராஜ் திரில்லர் சப்ஜெக்டில் இயக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் அவரது திறமைக்கு தீனி போடும்படியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பெண் கதாபாத்திரத்தை மையமாக கொண்ட இந்த படம் தொழில்நுட்பம் சார்ந்து சமூகத்தில் ஏற்படும் நன்மை தீமைகளை வெளிச்சம் போட்டுக்காட்டும் விதத்தில் உருவாகிறது.
இந்த படத்தின் பூஜை கடந்த ஜூலை 15-ம் தேதி சென்னையில் எளிமையாக நடந்தது. நடிகை கீர்த்தி சுரேஷ், தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு, இயக்குநர் கணேஷ் ராஜ் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
அப்போது படம் குறித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசும்போது, ‘‘இந்த படம் பரபரப்பான கதைக்களத்தில், திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்போடு, ரசிகரகளுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் வித்தியாசமான படமாக உருவாகிறது” என்றார்.