படங்களில் எனக்கு ரொமான்ஸ் வாய்ப்பு கிடைக்காமல் செய்கிறார்கள்! -‘கொலை’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விஜய் ஆண்டனி கலகல பேச்சு

விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பலரது நடிப்பில், பாலாஜி குமார் இயக்கத்தில் உருவாகி, வரும் ஜூன் 21-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘கொலை.’

இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு 18.7. 2023 அன்று சென்னையில் நடந்தது. படக்குழுவினரோடு சிறப்பு விருந்தினராக நடிகர் ஆர்யா கலந்து கொண்டார்.

நிகழ்வில் நடிகர் விஜய் ஆண்டனி, “பல வருடங்களுக்குப் பிறகு பாலாஜி குமார் தமிழில் படம் இயக்குவது மகிழ்ச்சியான விஷயம். படம் நன்றாகவே வந்திருக்கிறது. கதை சொல்லும்போது முதலில் மூன்று கதாநாயகிகள் என்று சொன்னார்கள். பிறகு இரண்டானது. அதிலும் மீனாட்சி இன்னொருவருக்கு ஜோடி. ரித்திகா எனக்கு தங்கச்சி போல் வருகிறார். எனக்கு ஒரேயொரு மனைவி என்று சொன்னார்கள். அந்த கதாபாத்திரமும் நம்மிடம் எரிந்து விழும். இப்படி ஒவ்வொரு படத்திலும் எனக்கு பெரிதாக ரொமான்ஸ் கிடைக்காமல் செய்கிறார்கள். ஆனாலும் படம் ஒரு ஜாலியான அனுபவமாக இருந்தது.

ஹீரோயின் மீனாட்சி அடிப்படையில் மருத்துவர், இப்போது ஐஏஎஸ் படித்து வருகிறார். அடுத்து தெலுங்கில் மகேஷ்பாபுவின் படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்” என்றார்.

இயக்குநர் பாலாஜி குமார், “ப்ளாஷ்பேக் அதற்குள் ப்ளாஷ்பேக் என பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் படம் இது. நம் ஊரின் வளம் அனைவருக்கும் தெரியும்படி இதில் கொண்டு வந்திருக்கிறேன். விஜய் ஆண்டனியிடம் இயல்பாகவே ஒரு குறும்பு உள்ளது. அதையும் கொண்டு வர வேண்டும், அதே சமயத்தில் அவர் கொஞ்சம் சீரியஸாகவும், வயதான தோற்றத்திலும் இருக்க வேண்டும். அதை சிறப்பாக செய்திருக்கிறார். நடிகை மீனாட்சியும் சிறப்பாக நடித்துள்ளார். ரித்திகா, அர்ஜூன் சிதம்பரம் என மற்ற நடிகர்களும் நன்றாக நடித்துள்ளனர். படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவைக் கொடுங்கள்” என்றார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் ஆர்யா, “நானும் விஜய் ஆண்டனியும் எங்களது ஆரம்ப காலக்கட்டத்தில் சினிமாவில் வளர்வதற்கு மாற்றி மாற்றி உதவிக் கொண்டோம். நல்ல படங்களுக்கு ஆதரவு கொடுப்பது எனக்கு மகிழ்ச்சி. விஜய் ஆண்டனி தனது ஒவ்வொரு படத்திலும் எதாவது ஒன்றை புதிதாக முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்று நினைப்பார். அந்த வகையில், இந்தப் படமும் நிச்சயம் வித்தியாசமாக இருக்கும். படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” என்றார்.

இசையமைப்பாளர் கிரீஷ் கோபால கிருஷ்ணன், “சமீப காலத்தில், எதுவும் கெஸ் பண்ண முடியாத தமிழ் படங்கள் வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில் ‘கொலை’ படமும் வெற்றி பெறும். ஒளிப்பதிவு, இசை என தனித்தனியாக பிரித்து பார்க்காமல் எப்போது படமாக நன்றாக இருக்கிறது என்று பார்வையாளர்கள் சொல்கிறார்களோ அப்போதே அது சிறந்த படமாக இருக்கும். ‘கொலை’யும் அதில் ஒன்று” என்றார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் ஆர்யா, “இந்த நிகழ்வுக்கு வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. நானும் விஜய் ஆண்டனியும் எங்களது ஆரம்ப காலக்கட்டத்தில் சினிமாவில் வளர்வதற்கு மாற்றி மாற்றி உதவிக் கொண்டோம். நல்ல படங்களுக்கு ஆதரவு கொடுப்பது எனக்கு மகிழ்ச்சி. விஜய் ஆண்டனி தனது ஒவ்வொரு படத்திலும் எதாவது ஒன்றை புதிதாக முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்று நினைப்பார். அந்த வகையில், இந்தப் படமும் நிச்சயமும் வித்தியாசமாக தான் இருக்கும். ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை என அனைவரும் சிறந்த பணியைக் கொடுக்கக் கூடியவர்கள். படக்குழு அனைவருக்கும் வாழ்த்துகள்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here