ஆர் எம் நீரன் ஒரு தனி இசை கலைஞர் (Independent Music Artist) தமிழில் பத்துக்கும் மேற்பட்ட இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். தெலுங்கில் ஒரு பாடல் வெளியிட்டுள்ளார்.
தற்போது கார்குழலி என்ற இசை ஆல்பத்தை இசை அமைத்து பாடியுள்ளார். அதில் தானும் நடித்துள்ளார்.
அந்த பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. கார்குழலி காதல், தாலாட்டு, இயற்கை கலந்த பாடலாக அமைந்துள்ளது. கேட்போருக்கு ஒரு மெல்லிய உணர்வுகளை கடத்தும் பாடலாக உருவாக்கப்பட்டுள்ளது. கிரன் ஷ்ரவன் மற்றும் இவரது குரலில் ரம்மியமான பாடலாக உருவாகியுள்ளது. காட்டுக்குள் மாயமாக இருக்கும் பெண்ணை பார்த்து பாடும் பாடலாக இது அமைந்துள்ளது. கலையால் ஈர்க்கப்பட்டு கலையை விரும்பும் இவர் இசையில் அடுத்தடுத்து நிறைய பாடல்கள் வரவுள்ளன.