ரிலீஸுக்கு ஒரு வாரம் முன்பாக தங்கர் பச்சானின் ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தை உங்கள் குடும்பத்தோடு கட்டணமின்றி பார்க்கலாம்! விவரங்கள் இதோ…

தங்கர் பச்சானின் படங்கள் என்றாலே மனித உறவுகளின் மேன்மையை எடுத்துக் காட்டுகிற, குடும்பங்களின் ஒற்றுமையை வலியுறுத்துகிற கதைக் களங்களை கொண்டிருக்கும். அதனால் யதார்த்த மனிதர்களிடம் அவரது படங்களுக்கு எப்போதுமே தனி வரவேற்பு உண்டு.

அந்த வகையில் தற்போது அவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கருமேகங்கள் கலைகின்றன.’ பாரதிராஜா, கவுதம் மேனன், யோகிபாபு, அதிதி பாலன் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த படம் வரும் செப்டம்பர் முதல் வாரம் வெளியாகவுள்ள நிலையில், இந்திய திரையுலக வரலாற்றிலேயே ஒரு புது முயற்சியாக ரிலீஸுக்கு ஒரு வாரம் முன்னதாக இப்படத்திற்கான குடும்ப காட்சிக்கு (Family Show) ஏற்பாடு செய்துள்ளார் தங்கர் பச்சான்.

பொதுவாக ஒரு படம் வெளியாகும் முன் திரைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் காண்பிக்கப்படுவது வழக்கம். ஆனால் முதல்முறையாக பொது மக்களுக்காக திரையிடப்படும் இம்முயற்சி தனித்துவமாக பார்க்கப்படுகிறது.

இந்த சிறப்பு காட்சியை, ஆர்வமுள்ள ரசிகர்களுக்குள் போட்டிக்கான நிபந்தனைகளை அறிவித்து தகுதியானவர்களை தேர்வு செய்து சென்னை கமலா தியேட்டரில் திரையிட இருக்கிறார்.

வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி நடக்கவிருக்கும் இந்த சிறப்பு குடும்பக் காட்சியில், படத்தில் நடித்த கலைஞர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் பங்கேற்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here