இயக்குநர்கள் சக்தி சிதம்பரம், வின்சென்ட் செல்வா ஆகியோரிடம் பணிபுரிந்த எம்.சண்முகவேல் இயக்கியுள்ள படம் ‘ராமர்பாலம்.’ கதாநாயகனாக மது, கதாநாயகியாக நிகிதா அறிமுகமாகும் இந்த படம் வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி வெளியாகவிருக்கிறது. தண்ணீர் நிறைந்தோடும் ஆற்றங்கரையில் உள்ள இரு ஊர்களுக்கு இடையே பாலம் அத்தியாவசியமாகிறது. ஆனால், பாலம் இல்லாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். பல ஊர் சுற்றி செல்கிறார்கள். அப்படியான நிலையை அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்கிறார்கள், அரசியல்வாதிகளிடம் முறையிடுகிறார்கள். எந்த பயனும் பலனும் இல்லை. ஆனால், திடீரென பாலம் உருவாகும் சூழல் ஏற்படுகிறது. அது எவ்வாறு என்பதே ராமர் பாலம் படத்தின் கதைக்களம்!
படத்தை சினிமா கம்பெனி சார்பில் டாக்டர்.கர்ணன் மாரியப்பன், எம்.முருகேசன் இணைந்து தயாரித்துள்ளனர்.உருவாக்கத்தில் உறுதுணை:-
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – எம் சண்முகவேல்
ஒளிப்பதிவு – ஆனந்த சரவணன்
இசை – கோபால்
பாடல்கள் – கலைக்குமார், கவிபாஸ்கர்