இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் குறும்படம் ‘கருவறை.’ அந்த படத்திற்கு இசையமைத்ததற்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து திரைத்துறையிலிருந்தும் பல்வேறு தரப்பிலிருந்தும் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. படத்தை இயக்கிய கணேஷ்பாபுவுக்கும் வாழ்த்துகள் பெருகிவருகிறது. தமிழக முதலமைச்சர், புதுச்சேரி ஆளுநர் என அரசாங்க ஆளுமைகளும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
ஊடகங்களிலும் இது குறித்து செய்திகள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் ‘கருவறை’ படத்தின் இயக்குநரை இசைஞானி இளையராஜா அழைத்துப் பாராட்டி, வாழ்த்தியிருக்கிறார்.
‘கருவறை’ விரைவில் முன்னணி ஓடிடி தளமொன்றில் வெளியாகவிருப்பதாக இயக்குநர் கணேஷ்பாபு தெரிவித்தார்.