நடிகர் ராணா டகுபதி குறைந்த பட்ஜெட்டில் உருவான மிகச்சிறந்த படங்களை வெளியிட்டு பெரியளவில் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார். அந்த வரிசையில் அடுத்ததாக, மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘கீதா கோலா’ படத்தை வெளியிடவிருக்கிறார். படம் தீபாவளிக்கு 9 நாட்களுக்கு முன்னதாக நவம்பர் 3-ம் தேதி திரையரங்குகளுக்கு வரவுள்ளது.
படத்தில் மொத்தம் எட்டு முக்கிய கதாபாத்திரங்கள். நகைச்சுவை பிரம்மா பிரம்மானந்தம் மிக வேடிக்கையானதொரு கேரக்டரில் நடித்துள்ளார், தருண் பாஸ்கர் உள்ளூர் டானாக வருகிறார். சைதன்யா ராவ் மடாடி, ரகு ராம், ரவீந்திர விஜய், ஜீவன் குமார், விஷ்ணு, ராக் மயூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
உருவாக்கத்தில் உறுதுணை:-
வசனம் – தருண் பாஸ்கர்
ஒளிப்பதிவு – AJ ஆரோன்
இசை – விவேக் சாகர்
படத்தொகுப்பு – உபேந்திர வர்மா
கலை இயக்கம் – ஆஷிஷ் தேஜா புலாலா
மக்கள் தொடர்பு – யுவராஜ்