சிம்ஹா நடிப்பில், அனைத்து வயதினரும் விரும்பும் விதத்தில் கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தடை உடை.’
இந்த படத்தில் நாயகியாக மிஷா ரங் நடிக்க ரோகிணி, செந்தில், பிரபு, சந்தான பாரதி, செல் முருகன், சரத் ரவி, தங்கதுரை, தீபக் ரமேஷ், மணிகண்ட பிரபு, சுப்பிரமணியம் சிவா ஆகியோரும் நடித்துள்ளனர்.
நடன இயக்குநர் பாபா பாஸ்கர் முதன் முறையாக முழு நீள கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நகரம், கிராமம் என இருவேறு களங்களில் கதை நடப்பதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு சென்னை மற்றும் சிவகங்கை மாவட்டத்தின் கிராமப்பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் ராகேஷ் என் எஸ். இவர் சூது கவ்வும் பட இயக்குநர் நலன் குமாரசாமி, எங்கேயும் எப்போதும் பட இயக்குநர் சரவணன், கட்டப்பாவை காணோம் பட இயக்குநர் மணி செய்யோன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.
அறிமுக இசையமைப்பாளர் ஶ்ரீ இசையில் பாடல்களைக் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். கருவறை’ குறும்படத்திற்கு இசையமைத்ததற்காக சமீபத்தில் தேசிய விருதுக்கு தேர்வான ஶ்ரீகாந்த் தேவா பின்னணி இசை அமைத்துள்ளார்.
பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தை ‘முத்ராஸ் ஃபிலிம் பேக்டரி’ (Mudhra’s film factory) ரேஷ்மி மேனன் தயாரித்துள்ளார். பட வெளியீட்டுக்கு முந்தைய பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் ‘ஃபர்ஸ்ட் லுக்’ வெளியாகி பல தரப்பிலிருந்தும் வரவேற்பை குவித்து வருகிறது.
ஃபர்ஸ்ட் லுக் ‘இது குடும்பத்துடன் அனைவரும் ரசித்துக் கொண்டாடத்தக்க கலக்கலான படம்’ என்பதை உறுதி செய்வதாக உள்ளது.
படக்குழு:-
எழுத்து இயக்கம் – ராகேஷ் என் எஸ்
தயாரிப்பு – ரேஷ்மி மேனன்
ஒளிப்பதிவு – கே ஏ சக்திவேல்
இசை – ஸ்ரீ
பின்னணி இசை- ஸ்ரீகாந்த் தேவா
பாடல்கள் – கவிப்பேரரசு வைரமுத்து
படத்தொகுப்பு – பொன் கதிரேஷ் PK
கூடுதல் திரைக்கதை – சாய்ராம் விஷ்வா
லைன் புரடியூசர் – திலீப் குமார்
நிர்வாக தயாரிப்பு – ஆர் பி பால கோபி
கலை – எம்.தேவேந்திரன்
மக்கள் தொடர்பு – AIM சதீஷ்