பிரமாண்டமாய் நடந்த மஹத் ராகவேந்திரா, மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் ‘காதலே காதலே’ படத்தின் பூஜை!

மஹத் ராகவேந்திரா, மீனாட்சி கோவிந்தராஜன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் படம் ‘காதலே காதலே.’ ஆர். பிரேம்நாத் எழுதி இயக்கும் இந்த படத்தை ‘ஸ்ரீவாரி பிலிம்’ நிறுவனம் தயாரிக்கிறது.

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, கே.எஸ்.ரவிக்குமார், வி.டி.வி கணேஷ், ரவீனா ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

‘ஃபீல் குட்’ உணர்வு தரும் விதத்திலான காதல் கதையை மையமாக வைத்து உருவாகவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 25; 2023 இன்று காலை பிரமாண்டமான பூஜையுடன் தொடங்கியது. நடிகர்கள், படக்குழுவினர், திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

படம் பற்றி இயக்குநர் ஆர். பிரேம்நாத் பேசியபோது, ‘‘அனைவரின் வாழ்க்கையிலும் இளமை பருவத்தில் இருந்து முதுமை வரை தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக காதல் இருந்து வருகிறது. இருப்பினும், காதலில் விழுவதும் அந்தத் துணையுடன் வலுவான உறவில் இருப்பதும் காலப்போக்கில் மாறிவிட்டது.

அந்த வகையில் ‘காதலே காதலே’ தற்போதைய தலைமுறையின் வாழ்க்கை, காதல் மற்றும் உறவுகள் பற்றிய அவர்களின் கண்ணோட்டத்தை திரையில் காண்பிக்கவிருக்கிறது.

பொழுதுபோக்கு அம்சங்களுடன் காதல் கொண்டாட்டமாக இந்தப் படம் இருக்கும். மஹத் ராகவேந்திராவுக்கு அனைத்துத் தரப்பிலும் ரசிகர்கள் உள்ளனர்.

கதாபாத்திரங்கள் மற்றும் திரைக்கதையை மேம்படுத்திய பிறகு, இந்த கதாபாத்திரங்களுக்கு மஹத்தும் மீனாட்சியும் சரியான தேர்வாக இருப்பார்கள் என்று உணர்ந்தேன்” என்றார்.

‘சீதா ராமம்’ படத்தின் ரொமாண்டிக் ஹிட் இசைக்குப் பிறகு விஷால் சந்திரசேகர் இந்தப் படத்தின் மூலம் மீண்டும் அப்படியான ஒரு இசையைத் தரவுள்ளார்.

உருவாக்கத்தில் உறுதுணை:-
ஒளிப்பதிவு – சுதர்சன் கோவிந்தராஜன்
கலை – எம்.எஸ். சாகு
எடிட்டிங் – தியாகு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here