யோகிபாபு, செந்தில் இருவரும் குழந்தை நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ள கலக்கலான பொலிடிகல் காமெடி திரைப்படம் ‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ வரும் ஜனவரி 24-ம் தேதி உலகமெங்கும் திரைக்கு வருகிறது.
சகுனி பட இயக்குநர் ஷங்கர் தயாள் குழந்தைகள் உலகத்தை மையமாக வைத்து இந்த படத்தை இயக்கியிருந்தார். (அவர் மிக சமீபத்தில் காலமானார்.)
திரையுலகில் குழந்தைகள் உலகத்தை மையமாக வைத்து இதுவரை உருவான படங்கள் பெற்றோர்களுக்கு அறிவுரை சொல்லும் படமாகவும், ஃபேன்டஸி, காமெடி, ஹாரர் என பொதுவான ஜானரில் மட்டுமே வந்துள்ளது. முதல் முறையாகக் குழந்தைகளின் உலகத்தில், அரசியல் பார்வையைச் சொல்லும் பொலிடிகல் காமெடி ஜானரில், அனைவரும் ரசிக்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது.
நீ என்னவாக ஆசைப்படுகிறாய் எனும் கேள்விக்கு, அரசியல்வாதியாக ஆசைப்படுகிறேன் எனும் ஒரு பள்ளி மாணவனின் பதிலும், அதைத்தொடர்ந்த நிகழ்வுகளும் தான் இப்படத்தின் மையம். குழந்தைகளின் உலகின் வழியே, அரசியலை அணுகும் இப்படம், ஒரு மாறுபட்ட அனுபவம் தரும் படைப்பாக இருக்கும்.
இப்படத்தின் முதன்மை பாத்திரங்களில் குழந்தை நட்சத்திரங்களான, இமயவர்மன் மற்றும் இயக்குநர் ஷங்கர் தயாளின் மகன் அத்வைத், ‘அன்டே சுந்தரனிகி’ படப்புகழ் ஹரிகா படேடா, மாஸ்டர் பவாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். முக்கிய பாத்திரங்களில் பருத்திவீரன் சரவணன், சுப்பு பஞ்சு, லிஸி ஆண்டனி, பிராங்க்ஸ்டர் ராகுல், அர்ஜுனன், பிச்சைக்காரன் படப்புகழ் இயக்குநர் மூர்த்தி, சித்ரா லக்ஷ்மன், மயில்சாமி, வையாபுரி, கம்பம் மீனா, கும்கி அஸ்வின், அஷ்மிதா சிங், வைகா ரோஸ், சோனியா போஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
மீனாக்ஷி அம்மன் மூவிஸ் அருண்குமார் சம்பந்தம், இயக்குநர் ஷங்கர் தயாள் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளனர்.
படக்குழு:-
எழுத்து இயக்கம் – ஷங்கர் தயாள் என்
ஒளிப்பதிவு – ஜெ லக்ஷ்மன்
எடிட்டர் – ஏ ரிச்சர்ட் கெவின்
இசை – ‘சாதக பறவைகள்’ சங்கர்
கலை இயக்குநர் – சி கே முஜிபுர் ரஹ்மான்
நிர்வாகத் தயாரிப்பு – பாண்டியன் நன்மாறன், இ சூர்யபிரகாஷ்
தயாரிப்பு நிர்வாகம் – ராஜாராமன், எம் வி ரமேஷ்
நடனம் – ராதிகா, அபு & சால்ஸ்
மக்கள் தொடர்பு – சதீஸ், சிவா (AIM)