நடிகர் வினித் பல வருடங்களுக்குப் பிறகு நடித்துள்ள படம் ‘காதல் என்பது பொதுவுடமை.’ படத்தை ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.
மனிதர்களுக்குள் காதல் வருவது இயல்பானதாக இருந்தாலும் காதலுக்கென்று வரைமுறைகளை வகுத்துவைத்துள்ள இந்த சமூகத்தில் இயல்பானதாக இருக்கும் காதலுக்குள் மிகமுக்கியமான உளவியல் சிக்கலை பேசும் படைப்பாக உருவாகியுள்ளது.
லிஜோமோல், வினித், ரோகிணி, கலேஷ், தீபா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் இந்த படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் சிறந்த வரவேற்பை பெற்றுஅனைவரும் பார்க்க வேண்டிய முக்ககியமான படம் என்ற பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
அதையடுத்து படத்தின் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. படத்தை வரும் பிப்ரவரி 14ம் தேதி கிரியேட்டிவ் எண்டர்டெய்னர் & டிஸ்ட்டிபியூட்டர் (CEAD) சார்பில் ஜி.தனஞ்ஜெயன் வெளியிடுகிறார்.