சரத்குமார், மோகன் பாபு கைகோர்த்த விஷ்ணு மஞ்சுவின் ‘கண்ணப்பா.’

இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக ‘கண்ணப்பா’ திரைப்படம் உருவெடுத்துள்ளது. மேலும், இந்த படத்தில் பிரபாஸ், மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் நிலையில், ‘பெடராயுடு’ பத்மஸ்ரீ டாக்டர்.மோகன் பாபு மற்றும் ‘நாட்டமை’ சரத்குமார் ஆகியோரின் வருகை ‘கண்ணப்பா’ திரைப்படத்தை மேலும் பலமாக்கியுள்ளது.

தென்னிந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களான மோகன் பாபு மற்றும் சரத்குமார் ஆகியோர் ‘கண்ணப்பா’ திரைப்படத்தில் நடிக்கும் தகவல் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில், தற்போது இவர்கள் நியூசிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார்கள்.

பன்முக நடிகரான சரத்குமார் முன்னணி நாயகனாக மட்டும் இன்றி பல்வேறு வேடங்களை சிறப்பாக கையாளக் கூடிய சிறந்த குணச்சித்திர நடிகராகவும் இந்திய சினிமாவில் முத்திரை பதித்துள்ளார். ‘பன்னி’, ‘பாரத் அனே நேனு’, ‘ஜெய ஜானகி நாயக’ மற்றும் ‘பகவந்த் கேசரி’ போன்ற தெலுங்கு திரைப்படங்களில் சிறப்பான வேடங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த சரத்குமார், ‘கண்ணப்பா’ படத்தில் ஈர்க்க கூடிய மிக முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார். மறுபக்கம், பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து பார்வையாளர்களை கவர்ந்திருக்கும், பல வருட அனுபவம் உள்ள நடிகர் மோகன் பாபு, சரத்குமாருடன் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

’மகாபாரதம்’ தொடரை இயக்கிய இயக்குநர் முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் ஒரு மைல் கல் திரைப்படமாக உருவாகி வரும் ‘கண்ணப்பா’ திரைப்படம் அழுத்தமான கதை சொல்லல், வியக்க வைக்கும் காட்சிகள் மற்றும் பலம் வாய்ந்த நட்சத்திரங்கள் ஆகியவற்றின் சரியான கலவையுடன் இந்திய சினிமா வரலாற்றில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here