ஜி.வி.பிரகாஷ் குமார், இவானா, பாரதிராஜா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘கள்வன்.’ முன்னணி ஒளிப்பதிவாளர் பி.வி.சங்கர் இயக்கியுள்ளார்.
படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து வெளியீட்டுக்கு முந்தைய போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், படத்திற்கான பின்னணி இசையை ரேவா ஹங்கேரியில் நம்பிக்கைக்குரிய இசைக்கலைஞர்கள் குழுவுடன் உருவாக்கியுள்ளார்.
அது குறித்து இசையமைப்பாளர் ரேவா பேசும்போது, ‘‘உணர்வுகள் இந்த படத்தின் மையமாக இருப்பதால், அதற்கான இசையைக் கொடுத்துள்ளோம். எனது பின்னணி இசைக்கு ரசிகர்கள் என்ன மாதிரியான ரெஸ்பான்ஸ் கொடுக்கப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். பல திறமையாளர்களால் உருவாகும் இந்த படத்தில் பணிபுரிவது பெருமையாக இருக்கிறது” என்றார்.
இந்த படத்தில் நக்கலைட்ஸ் ஜென்சன் திவாகர், பிரசன்னா பாலச்சந்திரன், நிவேதிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தீனா, பேராசிரியர் கு.ஞானசம்பந்தம், வினோத் முன்னா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளதோடு, படத்தின் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே, இயக்குநர் பாலாவின் ‘நாச்சியார்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ், இவானா இருவரும் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
‘ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி’ ஜி டில்லி பாபு தயாரித்துள்ளார். படம் அடுத்தாண்டின் துவக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.