சமூக வலைத்தளங்களில் சீரழியும் இளம் பெண்கள் வாழ்க்கையை மையப்படுத்தி உருவான ‘காத்து வாக்குல ஒரு காதல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

மாஸ் ரவி பூபதி கதை, திரைக்கதை, பாடல்கள் எழுதி, இயக்கி கதைநாயகனாக நடித்துள்ள படம் ‘காத்து வாக்குல ஒரு காதல்.’

‘சென்னை புரொடக்ஷன்ஸ்’ எழில் இனியன் தயாரித்துள்ள இந்த படத்தின் கதாநாயகிகளாக லட்சுமி பிரியா, மஞ்சுளா ஆகியோரும் மற்ற பாத்திரங்களில் சூப்பர் சுப்பராயன், சாய் தீனா, சத்யா, கல்லூரி வினோத், ஆதித்யா கதிர், தங்கதுரை, பவர் ஸ்டார், கபாலி விஸ்வந்த், மேனக்சன் மீப்பு, மொசக்குட்டி பிரியதர்ஷினி, பிரியங்கா ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.

காற்றை யாரும் பார்க்க முடியாது, உணர மட்டும்தான் முடியும். காதல் கருப்பா சிவப்பா பார்க்க முடியாது, சுவாசிக்க தான் முடியும். இப்படி இரண்டு பேருக்குள் நடக்கும் உண்மையான காதலைச் சுற்றி படம் உருவாகியுள்ளது.

வடசென்னை பின்னணியில் தற்போது சமூக வலைத்தளத்தில் இளம் பெண்கள் வாழ்க்கை எப்படி சீரழிகிறது என்பதை சுட்டிக்காட்டுவதே படத்தின் நோக்கம்.

படத்தின் காட்சிகளை சென்னை, பாண்டிச்சேரி, கேரளா உள்ளிட்ட இடங்களில் படமாக்கியிருக்கிறார்கள்.

ரசிகர்களுக்கு ஏற்ப காதல், காமெடி, ஆக்சன், திரில்லர், எமோஷனல் என கமர்ஷியல் அம்சங்களுடன் உருவாகியுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி சமூக வலைத்தளங்களில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

உருவாக்கத்தில் உறுதுணை:-
ஒளிப்பதிவாளர்கள்: ராஜதுரை, சுபாஷ் என் மணியன்
இசை: ஜி கே வி
எடிட்டர்: ராஜ்குமார்
ஸ்டண்ட்: சூப்பர் சுப்பராயன், பயர் கார்த்திக்
டிசைனிங்: ரெடிஸ் மீடியா
மக்கள் தொடர்பு: குமரேசன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here