திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிற ஜான் ஏ அலெக்ஸிஸ், தனியிசைப் பாடல்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருவதால் தொடர்ந்து அப்படியான பாடல்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். அதன் தொடர்ச்சியாக, கவிஞர் கபிலன் வரிகளில் அமைந்த ‘குக்குரு குக்குரு’ என்ற கானா வகை பாடலுக்கு இசையமைத்துள்ளார்.
இந்த பாடலை பாடகி இசைவாணி, சரவெடி சரண் இணைந்து பாடியிருப்பதோடு, ஸ்பெயின் நடனக்கலைஞர்களோடு சேர்ந்து நடனமும் ஆடியுள்ளனர். பாடல் இப்போது யூ டியூபில் வைரலாகி வருகிறது.
பாடல் உருவாக்கம் பற்றி பேசிய ஜான் ஏ அலெக்ஸிஸ், ‘‘உலகம் முழுவதும் சினிமாப்பாடல்களுக்கு இருக்கும் வரவேற்பை போல தனியிசைப்பாடல்களும் பெரும் வரவேற்பை பெற்றுவருவதும், தொழில் நுட்பம் வளர்ந்து வருவதும் இசைத்துறையில் புதிய இசையமைப்பாளர்கள் உருவாவதற்கு எளிதாகவும் இருக்கிறது” என்றார்.