வித்யாவின் மாமியாரை கொலை செய்தாரா அருண்? திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகரும் கலைஞர் தொலைக்காட்சியின் ‘ரஞ்சிதமே.’

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘ரஞ்சிதமே’ மெகா தொடருக்கு குடும்பங்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

தொடரில், நாயகி ரஞ்சிதாவாக மனிஷாஜித்தும், மாமியாராக ரூபாஸ்ரீயும், நாயகனாக சதீஷூம், முக்கிய கதாபாத்திரங்களில் ஹரிநந்தன், ராம்ஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

தொடரில் தற்போது, ரஞ்சிதாவின் தாலி வெளியே தெரிந்து அருண் வீட்டில் பூகம்பம் வெடிக்க, ரஞ்சிதாவுக்கு தாலி கட்டியது யார் என்று கேள்வி மேல் கேள்வி கேட்க, அருண் பெயரை மறைத்து மற்ற அனைத்து உண்மைகளையும் அருண் வீட்டில் சொல்கிறாள் ரஞ்சிதா. இதனால் வேதவல்லிக்கு ரஞ்சிதா மீதான அன்பு குறைய, சுதாவும் ரஞ்சிதாவை கேள்வி கேட்டு விளாச தாலி கட்டியது அருண் என்கிற உண்மையை ரஞ்சிதா சொல்கிறாள்.

இதற்கிடையே வித்யாவின் மாமியார் அருண் – ரஞ்சிதா ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை காட்டி திருமணத்தை நிறுத்த மேலும் சிக்கல் உருவாக, இந்த சிக்கலை தான் சரிசெய்வதாக செல்லும் அருண், வித்யாவின் மாமியாரை கொலை செய்துவிட்டதாக அருணை போலீஸ் கைது செய்ய என தொடர் பல்வேறு திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here