நான் இயக்குநரானால் அபிஷேக் போல கூலாக செயல்படுவேன்! -சொல்கிறார் நெட்ஃபிளிக்ஸ் ‘கில்லர் சூப்’ தொடரில் துபாளி பாத்திரத்தில் கவனிக்க வைக்கும் அன்புதாசன்

அபிஷேக் செளபே இயக்கி, நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ள ‘கில்லர் சூப்’ தொடர் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. க்ரைம், டார்க் காமெடி, விறுவிறுப்பான திரைக்கதை, திறமையான இயக்கம், துபாளி போல மனதைக் கவரும் கதாபாத்திரங்கள், நடிகர்களின் திறமையான நடிப்பு என இந்தத் தொடர் பொழுதுபோக்கோடு கூடிய சிறந்த கற்றல் அனுபவமாக இருக்கிறது.

தொடரில் துபாளி என்ற கதாபாத்திரம் அதிகம் கவனிக்க வைக்கிறது. அந்த பாத்திரத்தில் நடித்திருக்கும் அன்புதாசன். தன்னை நடிப்பில் அடுத்த நிலைக்கு எடுத்து சென்றிருக்கிறார். ’மீசைய முறுக்கு’, ‘கோலமாவு கோகிலா’, ’ஸோம்பி’, ’ஆதித்ய வர்மா’ மற்றும் ’ஓ மணபெண்ணே’ போன்ற வெற்றிப் படங்களின் மூலம் பிரபலமானவர் இவர்.

துபாளி கதாபாத்திரத்தில் நடித்தது குறித்து பேசிய அன்புதாசன் ”இயக்குநர் அபிஷேக் சௌபேயுடன் இணைந்திருப்பது என்னுடைய சினிமா பயணத்தில் முக்கியமான ஒரு விஷயமாகப் பார்க்கிறேன். இது ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது மட்டுமல்ல. என் வாழ்க்கையில் இதன் மூலம் பல விஷயங்களையும் நான் கற்றுக் கொண்டேன்.

மற்ற இயக்குநர்களுடன் ஒப்பிடும்போது, அபிஷேக் எப்போதும் அமைதியாகவும் தனது வேலையில் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தார். இவரது இந்த தனித்துவமான பண்பு படப்பிடிப்பில் அனைவரையும் ஒத்துழைப்புடனும் ஒவ்வொருவரின் தனித்திறனை வளர்த்தெடுக்கவும் உதவியது.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. கேரளாவில் ஒரு மழை நாள். அங்கு மழையால் நிலைமை தீவிரமாக இருந்தது. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாது அபிஷேக் நிலைமையை அமைதியாக கையாண்டார். ‘கில்லர் சூப்’ தொடருக்குப் பிறகு நான் இயக்குநரானால் அபிஷேக் போல மிகவும் கூலாக சூழ்நிலையைக் கையாள வேண்டும் என முடிவு செய்துள்ளேன்” என்றார்.

திரையுலகம் சில சமயங்களில் இயக்குநர்களால் இயக்கப்படும் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாக தோன்றலாம். ஆனால், அதிலிருந்து தனித்துவமான ஒரு இயக்குநராக அபிஷேக் செளபே இருக்கிறார். அதிக ஆர்ப்பாட்டமில்லாமல் தெளிவான பார்வையோடு தன் கதையையும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அவர் அணுகியிருப்பது ‘கில்லர் சூப்’ தொடரில் தெளிவாகத் தெரிகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here