கதையம்சமுள்ள படைப்புகளோடு வருகிற திறமையாளர்களை திரையுலகம் அரவணைக்க தவறுவதில்லை.
அந்த வகையில் ஸ்ரீனி சௌந்தரராஜன் ‘கபில் ரிட்டன்ஸ்’ என்ற படத்தைத் தயாரித்து, இயக்கி, கதைநாயகனாக நடித்தார். அந்த படம் கடந்தாண்டு நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகி அனைவரது பாராட்டுகளையும் குவித்தது.
அதில் உற்சாகமடைந்த ஸ்ரீனி சௌந்தரராஜன் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
படம் பற்றி அவரிடம் கேட்டபோது, ”படத்தின் கதை, திரைக்கதை புதிய கோணத்தில் அமைந்திருக்கும். விரைவில் மற்ற விவரங்களை தெரிவிக்கிறேன்” என்றார்.