காதலோட வலியைச் சொல்ல ஆயிரம் படம் இருக்கு; பெத்தவங்களோட வலியை சொல்லும் படம் இது! -ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் ‘காடு வெட்டி’ படம் பற்றி சொல்கிறார் இயக்குநர் சோலை ஆறுமுகம்

ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடிக்க, சங்கீர்த்தனா, விஷ்மியா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ள படம் ‘காடுவெட்டி.’

குணச்சித்திர வேடங்களில் சுப்ரமணிய சிவா, ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா, சுப்பிரமணியன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

படம் பற்றி இயக்குநர் சோலை ஆறுமுகம் பேசியபோது, மறுமலர்ச்சி,சிந்துநதிப் பூ,ஒன்பது ரூபாய் நோட்டு படத்திற்குப் பிறகு வடமாவட்ட வாழ்வியலை சொல்லும் படம் இது. பெத்தவங்களோட வலியை சொல்லும் படம் இது.

மன்னர்கள் போர் செய்த காலத்தில் போர்வீரர்கள் போர்ப் பயிற்சிக்காக இடங்களை தேர்வு செய்து காடுகளை வெட்டினார்கள். வெட்டிய நிலங்களில் பாதியை போர்ப் பயிற்சிக்காகவும் விவசாயத்திற்காகவும் பயன்படுத்தி வந்தனர். போர்க்கால முடிவுக்குப் பிறகு அந்த நிலங்கள் ஊர்களாக மாறியது. அந்த ஊர்களுக்கு காடுவெட்டி என பெயரிட்டனர். விவசாயம் செய்த தமிழ் பூர்வக்குடிகளின் கதை என்பதால் காடுவெட்டி என படத்திற்கு பெயர் வைத்தோம்.

கல்வியறிவும் பொருளாதார மேம்பாடும் இருந்தால் மட்டுமே பிழைப்புவாத அரசியலிடமிருந்து சாமானிய மக்கள் தங்களை காபாற்றிக்கொள்ள முடியும்.

மனித சமூகத்தின் வேறுபாடுகளை நேர்மையான பாதைகளால் மட்டுமே சரிசெய்ய முடியும். குறுக்குவழி வன்முறையை மட்டுமே உருவாக்கும்.

காதலோட வலியைச் சொல்ல ஆயிரம் படம் இருக்கு. பெத்தவங்களோட வலியை சொல்ல ஒன்னு ரெண்டு படங்கள்தான் இருக்கு. அந்த ஒன்னு ரெண்டு படத்துல இந்த படமும் இருக்கும்” என்றார்.

மஞ்சள் ஸ்கிரீன்ஸ் பட நிறுவனம் சார்பில் த. சுபாஷ் சந்திரபோஸ், கே.மகேந்திரன், என். மகேந்திரன், சி. பரமசிவம், ஜி. ராமு சோலை ஆறுமுகம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா பின்னணி இசை அமைத்திருக்கிறார். வணக்கம் தமிழா சாதிக் பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். மா.புகழேந்தி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here