ஒடுக்கப்பட்ட மக்களை துன்புறுத்துகிறவனை ஐந்து பேர் இணைந்து பழிவாங்கத் துடிக்கும் அதிரடியான கதைக்களத்தில் உருவான ‘கங்கணம்’ விரைவில் ரிலீஸ்!

‘கங்கணம்’ என்கிற பெயரில் உருவாகியிருக்கும் திரைப்படத்தில் கதையின் நாயகனாக கூத்துப்பட்டறை சௌந்தர் நடித்துள்ளார்.

குறும்படங்கள் இயக்கி பிரபலமான அ.இசையரசன் இயக்கியுள்ளார். (இவர் இயக்கிய ‘என் கண்ணே’ என்கிற குறும்படம் நான்கு விருதுகள் பெற்றது.)

இந்த படத்தின் கதை நாயகன் குடும்பத்தில் கொடூரமான சம்பவம் ஒன்றை வில்லன் செய்து விடுகிறான். அது மட்டுமல்லாமல் ஒரு போலீஸ் அதிகாரியையும் உச்சகட்ட அவமானப் படுத்தி விடுகிறான். அத்தோடு நிற்காமல் அங்குள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அவன் பெரிய தொல்லை கொடுத்து வருகிறான். அவர்களில் ஐந்து பேர் கொண்ட குழுவாக இணைந்து பழிவாங்கத் துடிக்கிறார்கள். இப்படி பாதிக்கப்பட்ட மூன்று தரப்பினருமே அவனை பழிவாங்க வேண்டும் என்று கடும் கோபம் கொண்டு கங்கணம் கட்டிக்கொண்டு வைராக்கியமாக இருக்கிறார்கள். அவனை சம்ஹாரம் செய்ய வேண்டும் என்று சந்தர்ப்பம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படிப் பழிவாங்குதலின் மூன்று பரிமாணங்களும் ஒரு புள்ளியில் மையம் கொள்ளும்போது என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

ஜீவி 2, டைட்டில் படங்களில் நடித்த அஸ்வினி சந்திரசேகர் கதாநாயகியாக நடித்துள்ளார். மூன்றாம் மனிதன், குற்றச்சாட்டு, கிளாஸ்மேட் படங்களில் நடித்தவர் பிரணா இன்னொரு நாயகியாக நடித்துள்ளார்.

முக்கிய கதாபாத்திரத்தில் சிரஞ்சன், போலீஸ் அதிகாரியாக ‘பருத்திவீரன்’ சரவணன், வில்லனாக சம்பத்ராம் நடிக்க, ‘மஞ்சுமல் பாய்ஸ்’ படத்தில் நடித்த அட்ரஸ் கார்த்திக் முக்கியமான பாத்திரத்தில் வருகிறார்.

மனோபாலா, ‘விஜய் டிவி’ ராமர், சேதுபதி ஜெயச்சந்திரன், ‘கயல்’ மணி, ‘ராட்சசன்’ யாசர் , அர்ச்சனா மாரியப்பன், ஸ்ரீ மகேஷ், சிரஞ்சன் கேஜி, பாரிவள்ளல், அருண்பிரசாத், கும்கி தரணி, அறந்தாங்கி மஞ்சுளா, ரோகிணி பழனிச்சாமி, ரியா, ஆகியோரும் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு மதுரை மேலூர், சென்னை, தேனி என பல்வேறு பகுதிகளில் 70 நாட்கள் நடைபெற்றுள்ளது.

படத்தை ‘கல்யாணி என்டர்பிரைசஸ்’ கல்யாணி கே, சிரஞ்சன் கேஜி இருவரும் தயாரித்துள்ளார்கள்.

படத்தை வெளியிடுவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. விரைவில் படத்தின் வெளியீட்டுத் தேதி தெரியவரும்.

படக்குழு:
ஒளிப்பதிவு: ‘முந்திரிக்காடு’ உட்பட ஆறு படங்களில் பணியாற்றிய ஜி ஏ சிவசுந்தர்
இசை: நூற்றுக்கு மேற்பட்ட ஆல்பங்கள் உருவாக்கிய செல்வா
பாடல்கள்: யுகபாரதி
பாடியவர்கள்: தெருக்குரல் அறிவு, வி எம் மகாலிங்கம், கயல் கோபு, ஸ்ரீநிஷா
படத்தொகுப்பு: ஜெ ஜெயபாலன்
சண்டைக் காட்சி: மிரட்டல் செல்வா
நடன இயக்குநர்கள்: தினா, ஜாய்மதி
கலை இயக்கம்: கல்லை தேவா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here