காதலை மூன்று வகைப்படுத்தி உருவாகியுள்ள படம் ‘காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை காதலர் தினம்.’
கெளரி சங்கர் தனது எம்.ஜி.எஸ். நிறுவனம் சார்பில் தயாரித்து இயக்கியுள்ளார். இவர் இயக்கும் 3-வது படம் இது.
இந்த படத்தில் சரவணன், அபிநயா அன்பழகன், ஸ்ரீ பவி , ஐஸ்வர்யா பாஸ்கரன், ரமேஷ் கண்ணா, கும்கி அஸ்வின், நடேசன், தெனாலி, சன் டிவி அகல்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் கலை, உடை, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், தயாரிப்பு, இயக்கம் என எட்டு பொறுப்புகளை ஏற்றுள்ள கெளரி சங்கரிடம் படம் பற்றி கேட்டபோது, இன்றைய காதலை மூன்று வகைப்படுத்தியிருக்கிறேன். புரிந்த காதல், புரியாத காதல், புதிரான காதல் என்பது தான் அது. புரிந்த காதல் சுகமானது. புரியாத காதல் சுமையானது. மூன்றாவது புரியாத காதல் முடிவில்லாதது. இதற்காக ஒவ்வொரு காதலுக்கும் ஒவ்வொரு ஜோடிகளை வைத்திருக்கிறேன்.
இன்றைய இளைய சமுதாயம் சமூகத்தில் வாழ்க்கையை தொலைக்கிறார்களா? அதையே தொடர்கிறார்களா? என்பதை சுவையான திரைக்கதையில் விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறேன்” என்றார்.
படக்குழு:
இசை: ஆதிஷ் உத்ரியன்
ஒளிப்பதிவு: து. மகிபாலன்
படத்தொகுப்பு: லட்சுமணன்
சண்டை பயிற்சி: சரவணன்
நடனப் பயிற்சி: சுரேஷ்