ஓட்டுக்குப் பணம் கொடுக்கலைன்னா எம்ஜிஆரே ஜெயிக்க முடியாது! -‘கட்சிக்காரன்’ டிரெய்லர் ஏற்படுத்தும் அதிர்வலை 

சமூக ஊடகங்களில் சரசரவென பரவி, பலதரப்பிலும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது ‘கட்சிக்காரன்’ படத்தின் டிரெய்லர்! காரணம் அதிலுள்ள வீரியமான வசனங்கள்…

”நாட்டுக்குள்ள எந்த கட்சியுமே சரியில்ல .எல்லா கட்சியுமே கோடி கோடியா பணத்தை அடிக்கிறதுலதான் குறிக்கோளா இருக்காங்க.அதனால மக்களுக்கு நல்லது பண்ற மாதிரி ஒரு நல்ல கட்சியை கண்டுபிடித்து அனுப்பி வைடா ஆண்டவா ”

“உங்கள மாதிரி ஒரே கட்சிக்கு உழைச்சு ஓட்டாண்டியாக நான் தயாரில்லை. அதுக்கு நானே ஒரு கட்சி ஆரம்பிச்சு தொண்ட கிழிய கத்தி, காசு கொடுத்து ஓட்டு வாங்கிட்டு முதலமைச்சர் ஆயிட்டு மூட்ட மூட்டையா கொள்ள அடிச்சுட்டு போயிட்டே இருக்கலாம்” “கூட்டணிக்காக கூட்டி கொடுப்பியாடா நீ?”

“இந்தக் கட்சியில கூட்டணி வச்சா அந்த கட்சிக்காரன் ஏசுவான். அந்தக் கட்சியில கூட்டணி வச்சா இந்தக் கட்சிக்காரன் ஏசுவான். மக்கள் வேற காறித் துப்புவாங்க.
கூட்டணி வச்சு பெட்டி வாங்குறத சாதாரண விஷயமா நினைக்கிறியா நீ?”

“எந்தத் தலைவன் சொந்த காசு செலவு பண்றான்? மனுத் தாக்கல் செய்யும்போது ஆயிரம் கோடி சொத்து இருக்கும் .ஆனா ஒரே ஒரு கார் இருக்கும்பான்.எல்லாத்தையும் பொண்டாட்டி பேர்ல வச்சுட்டு, பொய் சொல்லுவான் .அவனுக்கும் ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சுட்டு தான் இருக்காங்க.”

“அவங்க கொடுக்கும் குடத்துக்கும் குவார்ட்டருக்கும் நம்பி நல்லவங்கன்னு நினைச்சு ஓட்டு போடறோம். அவங்க நம்ம கிட்ட பல கோடி ஆட்டைய போட்டு  பணக்காரனாயிடுறாங்க.”

“இப்ப இருக்கிற நிலைமையில ஓட்டுக்குப் பணம் கொடுக்கலைன்னா எம்ஜிஆரே இருந்தாலும் ஜெயிக்க முடியாது” இப்படியாகப்பட்ட வசனங்கள் சில நிமிட ட்ரெய்லரில் இடம்பெற்று பரபரப்பூட்டி  வருகின்றன.

இப்படத்தில் விஜித் சரவணன் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இவர் தோனி கபடிகுழு, வேட்டைநாய் , படங்களில் நடித்தவர்.
ஸ்வேதா டாரதி கதாநாயகி.

”காதல் முன்னேற்ற கழகம்’ படத்தில்  வில்லனாக நடித்த சிவசேனாதிபதி அரசியல் தலைவராகவும் காமெடியனாக AR தெனாலி, அப்புக்குட்டி,  அசுரவதம் படத்தின் இயக்குநர் மருதுபாண்டியன், நாசரின் தம்பி  ஜவகர் ,விஜய் கெளதம், சி.என்.பிரபாகரன்,வின்சென்ட் ராய், குமர வடிவேலு,மாயி சுந்தர், ரமேஷ் பாண்டியன், பரந்தாமன், சாய்லட்சுமி,நந்தகுமார், சக்திவேல் முருகன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

டிரெய்லர் ஏற்படுத்தியுள்ள பரபரப்பால் படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

தொழில்நுட்பக் குழு:- ஒளிப்பதிவு- மதன்குமார், எடிட்டிங் – யு கார்த்திகேயன், இசை – ரோஷன் ஜோசப் பின்னணி இசை – C. M. மகேந்திரா, பாடல்கள் நா. ராசா, பாடகர்கள் – ஹரிசரண், வேல்முருகன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here