கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மெகா தொடர் ‘பொன்னி C/O ராணி.’
பொன்னியாக ப்ரீத்தி சஞ்ஜீவும், ராணியாக ராதிகா சரத்குமாரும் நடிக்கும் இந்த தொடரில் புதிதாக திருமணமாகிய சூர்யா – பவித்ரா ஜோடியும், சந்துரு – ஸ்வேதா ஜோடியும் தேனிலவுக்கு சென்று திரும்ப, டிரஸ்ட்டை கைப்பற்ற நினைக்கும் புஷ்பவள்ளியின் திட்டமும் நடக்காமல் போக, புஷ்பவள்ளியும், பூஜாவும் பொன்னி குடும்பத்தை பழிவாங்க துடிக்கிறார்கள்.
இதற்கிடையே புஷ்பவள்ளி செல்லும் கார் விபத்தில் சிக்க, தன்னுடைய குடும்பத்தை இழந்து தவிப்பதாக பூஜா பொன்னியிடம் தஞ்சமடைகிறார். பொன்னி குடும்பத்தை அழிக்கும் முடிவோடு பொன்னி வீட்டிற்குள் நுழையும் பூஜாவின் அடுத்த திட்டம் என்னவாக இருக்கும்? என்கிற எதிர்பார்ப்போடு தொடர் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.