தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் வெளியிட்ட‘குற்றம் புரிந்தால்’ படத்தின் முதல் பாடல்!

‘நான் சிவனாகிறேன்’, ‘இரும்பு மனிதன்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய டிஸ்னி இயக்கும் படம் ‘குற்றம் புரிந்தால்.’

ஆதிக் பாபு கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக பெங்களூரைச் சேர்ந்த அர்ச்சனா நடிக்கும் இந்த படத்தை படத்தை, தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஏறத்தாழ 70 படங்களுக்கு மேல் புரொடக்ஷன் மேனேஜராக பணிபுரிந்த ஆத்தூர் ஆறுமுகம் தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், அபிநயா, அருள் டி.ஷங்கர், ராம், ரேணிகுண்டா நிசாந்த் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.இந்த படத்தின் முதல் பாடலை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் முரளி இராம நாராயணன் வெளியிட்டு படக்குழுவை வாழ்த்தினார்!

அவரது அலுவலகத்தில் எளிமையாக நடந்த விழாவில், தயாரிப்பாளர் விஜயகாந்த் சுப்பையா, இயக்குநர் வீரா, தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினர் விஜயமுரளி ஆகியோர் கலந்து கொண்டனர்!

 

படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, ”மர்ம நபர்களால் தனது குடும்பத்தினர் கொல்லப்பட்ட பிறகு, மன உளைச்சலால் விரக்தி அடைந்த ஒருவன், தன் கைகளில் நீதியை எடுக்கிறான். அவன் கொலையாளிகளை மட்டுமல்லாமல் அவர்கள் சட்டத்திலிருந்து தப்பிக்க காரணமாக இருந்தவர்களையும் தண்டிக்க குறி வைக்கிறான். அவன் தண்டித்தானா, இல்லையா என்பதை காதல், செண்டிமென்ட், ஆக்ஷன் கலந்து, சமூக அக்கறையுடன் இப்படத்தை இயக்கியுள்ளேன்” என்றார்.

இந்த படம் பிப்ரவரி மாதம் 24-ம் தேதி திரைக்கு வருகிறது.

படக்குழு:-
இசை – கே.எஸ்.மனோஜ்
பாடல்கள் – கபிலன், கார்த்திக் நேதா
ஒளிப்பதிவு – கே.கோகுல்
மக்கள் தொடர்பு – கோவிந்தராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here