கே.இராமையா செட்டி மகளிர் பள்ளியின் 75-வது ஆண்டு விழா கொண்டாட்டம்! நீதிபதி டிக்கா ராமன் பட்டிமன்ற பேச்சாளர் புலவர் ஆர்.ராமலிங்கம் பங்கேற்பு!

சென்னை மண்ணடி பகுதியில் அமைந்துள்ள கே. இராமையா செட்டி ஏ.ஆர்.சி மகளிர் மேல்நிலைப் பள்ளியின் 75-வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது!நீதிபதி ஆர்.எம்.டி. டிக்கா ராமன், பட்டிமன்ற பேச்சாளர் புலவர் ஆர்.ராமலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.

பள்ளிக் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. பரிசுகள் வழங்கப்பட்டன!

பள்ளி நிர்வாக குழு தலைவர் டாக்டர் வி.பாலு வரவேற்புரை ஆற்றினார். பள்ளி வரலாற்றினை பள்ளி செயலாளர் டாக்டர் எஸ்.ஹேமலதா எடுத்துரைத்தார். பின்பு பள்ளியின் ஆண்டறிக்கையை தலைமை ஆசிரியை ஆர்.பரமேஸ்வரி வாசித்தார்.

விழா தலைவர் நீதியரசர் ஆர்.எம்.டி. டிக்கா ராமன், சென்னை உயர் நீதிமன்ற விழா மலரினை வெளியிட்டு, ‘மாணவர்களுக்கு அறிதலும் புரிதலும் அவசியம்’ என்றார்.

அவரிடமிருந்து விழா மலரினை பெற்றுக்கொண்ட நகைச்சுவை நாவலர் புலவர் எம்.ராமலிங்கம், மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் பேசினார்.

பள்ளிக் குழு உறுப்பினர் டாக்டர் பி.மகாலட்சுமி மாணவர்களுக்கு கல்வியின் அவசியத்தை எடுத்துரைத்தார். துணைத் தலைவர் எஸ்.உஷா உரையாற்றினார். கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து, உதவி தலைமை ஆசிரியை கனக ஜோதி நன்றியுரை ஆற்றினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here