முரட்டு மீசை, நெருப்புப் பார்வை, அரிவாளோடு ஆவேசம்… ‘கழுவேத்தி மூர்க்கன்’ போஸ்டரில் மிரட்டும் அருள்நிதி!

கவனம் ஈர்க்கும் படங்களில் தொடர்ந்து நடித்துவரும் அருள்நிதி அடுத்தடுத்தும் அதேபோன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.அந்த வகையில், கவின் -அபர்ணாதாஸ் நடிப்பில் வெற்றியடைந்த ‘டாடா’ படத்தைத் தயாரித்த ஒலிம்பியா மூவிஸ் அம்பேத்குமார் தயாரிப்பில், ‘ராட்சசி’ படப்புகழ் சை. கெளதமராஜ் இயக்கத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க ‘கழுவேத்தி மூர்க்கன்’ என்ற படம் உருவாகி வருகிறது.

‘சார்பட்டா பரம்பரை’, ‘நட்சத்திரம் நகர்கிறது’ போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்த துஷாரா விஜயன் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றதோடு படம் குறித்தான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, இராமேஸ்வரம், விருதுநகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது.

நடிகர்கள்:  அருள்நிதி கதாநாயகனாக நடிக்க, துஷாரா விஜயன் படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த், சரத்லோகிதாஸ்வா, ராஜசிம்மன், ‘யார்’ கண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படக்குழுவினர் குறித்த விவரம்:
இயக்கம்: சை கௌதம ராஜ்
இசை: டி. இமான்
பாடல்கள்: யுகபாரதி
ஒளிப்பதிவு: ஸ்ரீதர்
படத்தொகுப்பு: நாகூரான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here