விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்பட்ட, ஒரு கிளாசிக் தொடர்.இந்த பிரபலமான தொடர், கடந்த ஆண்டு டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஒரு வெப் சீரிஸாக புதிய அவதாரத்தில் மீண்டும் வந்தது. புதிய நடிகர்கள் மற்றும் நவீனக் கால கதைக்களத்தில் அட்டகாசமாக எடுக்கப்பட்டிருந்த இந்த சீரிஸ், ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
தற்போது கனா காணும் காலங்கள் தொடரின் சீசன் 2 ஏப்ரல் 21 முதல் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது.
சீசன் 1 முடிவடைந்த இடத்திலிருந்து இரண்டாவது சீசன் தொடர்கிறது. இந்த புதிய சீசனில் சிறகுகள் மாணவர்களிடமிருந்து காதல், சந்தோஷம், ஏக்கம், என அத்தனை உணர்வுகளையும் ரசிகர்கள் இரண்டு மடங்காகப் பெறுவார்கள்.