அருள்நிதி நடிக்க, ‘ராட்சசி’ படத்தை இயக்கி கவனம் ஈர்த்த சை.கௌதமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கழுவேத்தி மூர்க்கன்.’
இந்த படத்தில் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்க, சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனிஷ்காந்த், சரத் லோஹிதாஸ்வா, ராஜா சிம்மன், யார் கண்ணன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் மூலம் நீண்ட நாட்களுக்குப் பிறகு கிராமப்புற பின்னணியில் நடக்கும் கதைக்களத்தில் அடியெடுத்து வைத்துள்ளார் அருள்நிதி. நடிகர் கார்த்தி, நடிகை கீர்த்தி சுரேஷ், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பாளர் தனஞ்செயன் ஆகியோர் இணைந்து வெளியிட்ட இந்த படத்தின் டீசர் 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன் பெரியளவில் வரவேற்பை சம்பாதித்து வருகிறது.
டீசர் ஆக்ஷன், காதல், குடும்ப உணர்வுகள் என படம் 100% குடும்ப பொழுதுபோக்குடன் இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
இந்த படத்துக்கு டி இமான் இசையமைத்திருக்க யுகபாரதி பாடல்களை எழுதுதியுள்ளார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார். நாகூரன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.
இந்த படத்தை ஒலிம்பியா மூவீஸ்’ அம்பேத்குமார் தயாரித்துள்ளார். சமீபத்தில் ஒலிம்பியா மூவிஸ் தயாரிப்பில் வெளியான ‘டாடா’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.