கபில்தேவ் போல் விளையாடுவதாக சிறுவயதில் பெயரெடுத்தாலும், அந்த வயதில் சாதனை எதையும் செய்யமுடியாத ஒருவன் அதே திறமையால் தனது 40வது வயதில் ஊர் உலகம் தன்னை திரும்பிப் பார்க்கும்படி செய்வதே ‘கபில் ரிட்டன்ஸ்.’
ஐடி நிறுவனப் பணியில் நன்றாக சம்பாதித்து மனைவி, மகனோடு என வசதியாக வாழ்கிற ஸ்ரீனி, தன் மகன் கிரிக்கெட் வீரராக ஆசைப்பட, அதை கடுமையாக எதிர்க்கிறார். தன் மகனை இன்ஜினியராக்கி பார்க்க வேண்டும் என்பது அவருடைய ஆசையாக இருக்கிறது. ‘ஓ, அதனால்தான் மகனுடைய விருப்பத்துக்கு முட்டுக்கட்டை போடுகிறாரா?’ என்றால், ‘நோ நோ மேட்டரே வேற’ என்கிறது பிளாஷ்பேக்.
கிரிக்கெட் விளையாட்டில் நேர்ந்த அசம்பாவிதம், கொலைப் பழி என ஸ்ரீனியை சுற்றிச் சுழலும் அந்த பிளாஷ்பேக்கில் கணிசமான பரபரப்பும் விறுவிறுப்பும் இருக்கிறது.
அதுவரை அப்பாவியாய் இருந்தவர் மகனுக்கு ஆபத்து நேர்கிறபோது அதிரடி அவதாரம் எடுப்பதிலிருந்து, மகனுக்கு வாய்ப்பு கேட்டுப் போய் தனது 40வது வயதில் அதிவேகமாக பவுலிங் போட்டு சாதனை செய்வதுவரை, படத்தின் இயக்குநரும் அவரே என்பதால் கதையின் தேவையுணர்ந்து கச்சிதமாக நடித்திருக்கிறார் ஸ்ரீனி செளந்தரராஜன்.
ஸ்ரீனியின் மனைவியாக அழகும் கனிவும் கலந்துசெய்த கலவையாய் வருகிற நிமிஷாவின் நடிப்பு அத்தனை இயல்பு.
கிரிக்கெட் கோச்சாக வருகிற ரியாஸ்கான் கதாநாயகனுடன் ஈகோ மோதலில் ஈடுபடுவதில் வெளிப்படுத்தும் வில்லத்தனம் நேர்த்தி.
ஸ்ரீனிக்கு மகனாக நடித்திருக்கிற மாஸ்டர் பரத், இளவயது ஸ்ரீனியாக நடித்திருக்கிற இளைஞன், ஆரம்பத்தில் வில்லன்போல் கெத்து காட்டி பின்னர் மனிதாபிமானியாக மாறிப்போகிற பருத்தி வீரன்’ சரவணன், ஹீரோவுக்கு நண்பனாக வருகிற வையாபுரி என அனைவரின் நடிப்பும் கதையின் போக்கிற்கு பலம் சேர்த்திருக்கிறது.
விளையாட்டுப் போட்டிகளின் தேர்வுக் கமிட்டி ஒருவரை நிராகரிக்க முடிவு செய்தால் எந்தளவுக்கு தரம்தாழ்ந்து போகும் என்பதை பல படங்களில் பார்த்த நமக்கு, இந்த படமும் அதேபோன்ற சுயநல கமிட்டியை சுட்டிக் காட்டியிருக்கிறது.
மனதுக்கு உற்சாகம் தர ‘ஹேப்பி மார்னிங்’, இதம் தர ‘காலம் கனிந்ததே’ என பாடல்களின் இசையில் வெரைட்டி காட்டியிருக்கிறார் ஆர்.எஸ்.ராஜ்பிரதாப்.
ஷியாம் ராஜின் ஒளிப்பதிவில் காட்சிகள் அத்தனையும் பளீரென்றிருக்கிறது.
திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் கூட்டி, காட்சிகள் சில கபில்தேவ் போல் விளையாடுவதாக சிறுவயதில் பெயரெடுத்தாலும், அந்த வயதில் சாதனை எதையும் செய்யமுடியாத ஒருவன் அதே திறமையால் தனது 40வது வயதில் ஊர் உலகம் தன்னை திரும்பிப் பார்க்கும்படி செய்வதே ‘கபில் ரிட்டன்ஸ்.’
ஐடி நிறுவனப் பணியில் நன்றாக சம்பாதித்து மனைவி, மகனோடு என வசதியாக வாழ்கிற ஸ்ரீனி, தன் மகன் கிரிக்கெட் வீரராக ஆசைப்பட, அதை கடுமையாக எதிர்க்கிறார். தன் மகனை இன்ஜினியராக்கி பார்க்க வேண்டும் என்பது அவருடைய ஆசையாக இருக்கிறது. ‘ஓ, அதனால்தான் மகனுடைய விருப்பத்துக்கு முட்டுக்கட்டை போடுகிறாரா?’ என்றால், ‘நோ நோ மேட்டரே வேற’ என்கிறது பிளாஷ்பேக்.
கிரிக்கெட் விளையாட்டில் நேர்ந்த அசம்பாவிதம், கொலைப் பழி என ஸ்ரீனியை சுற்றிச் சுழலும் அந்த பிளாஷ்பேக்கில் கணிசமான பரபரப்பும் விறுவிறுப்பும் இருக்கிறது.
அதுவரை அப்பாவியாய் இருந்தவர் மகனுக்கு ஆபத்து நேர்கிறபோது அதிரடி அவதாரம் எடுப்பதிலிருந்து, மகனுக்கு வாய்ப்பு கேட்டுப் போய் தனது 40வது வயதில் அதிவேகமாக பவுலிங் போட்டு சாதனை செய்வதுவரை, படத்தின் இயக்குநரும் அவரே என்பதால் கதையின் தேவையுணர்ந்து கச்சிதமாக நடித்திருக்கிறார் ஸ்ரீனி செளந்தரராஜன்.
ஸ்ரீனியின் மனைவியாக அழகும் கனிவும் கலந்துசெய்த கலவையாய் வருகிற நிமிஷாவின் நடிப்பு அத்தனை இயல்பு.
கிரிக்கெட் கோச்சாக வருகிற ரியாஸ்கான் கதாநாயகனுடன் ஈகோ மோதலில் ஈடுபடுவதில் வெளிப்படுத்தும் வில்லத்தனம் நேர்த்தி.
ஸ்ரீனிக்கு மகனாக நடித்திருக்கிற மாஸ்டர் பரத், இளவயது ஸ்ரீனியாக நடித்திருக்கிற இளைஞன், ஆரம்பத்தில் வில்லன்போல் கெத்து காட்டி பின்னர் மனிதாபிமானியாக மாறிப்போகிற பருத்தி வீரன்’ சரவணன், ஹீரோவுக்கு நண்பனாக வருகிற வையாபுரி என அனைவரின் நடிப்பும் கதையின் போக்கிற்கு பலம் சேர்த்திருக்கிறது.
விளையாட்டுப் போட்டிகளின் தேர்வுக் கமிட்டி ஒருவரை நிராகரிக்க முடிவு செய்தால் எந்தளவுக்கு தரம்தாழ்ந்து போகும் என்பதை பல படங்களில் பார்த்த நமக்கு, இந்த படமும் அதேபோன்ற சுயநல கமிட்டியை சுட்டிக் காட்டியிருக்கிறது.
மனதுக்கு உற்சாகம் தர ‘ஹேப்பி மார்னிங்’, இதம் தர ‘காலம் கனிந்ததே’ என பாடல்களின் இசையில் வெரைட்டி காட்டியிருக்கிறார் ஆர்.எஸ்.ராஜ்பிரதாப்.
ஷியாம் ராஜின் ஒளிப்பதிவில் காட்சிகள் அத்தனையும் பளீரென்றிருக்கிறது.
திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் கூட்டி, போர் அடிக்கிற சில காட்சிகளை தவிர்த்திருந்தால் வசூலில் ‘சிக்ஸர்’ அடித்திருக்கலாம்.