விரும்புவது கிடைக்காமல் போவதுகூட அதிர்ஷ்டமே! -யோகிபாபுவின் ‘லக்கிமேன்’ படத்திலிருக்கும் சுவாரஸ்யம்

‘நாம் விரும்புவது கிடைக்காமல் போவதும்கூட ஒரு விதத்தில் அதிர்ஷ்டம்’ என்று சொல்லும் விதத்தில் உருவாகிறது ‘லக்கிமேன் என்ற படம்.

தேர்ந்தெடுத்த கதைகளில் கதைநாயகனான நடித்து வருகிற யோகிபாபு இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க, அவருடன் வீரா, அப்துல் லீ, ஆர்.எஸ். சிவாஜி, அமித் பார்கவ், சாத்விக் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘கடைசி விவசாயி’ படத்தில் நீதிபதியாக நடித்து கவனம் ஈர்த்த ரேச்சல் ரெபேக்காவும் இந்த படத்தில் நடித்துள்ளார்.

பாலாஜி வேணுகோபால் இயக்கும் இந்த படம் உண்மையான அதிர்ஷ்டம் என்றால் என்ன என்பதையும், எந்த அளவிற்கு அது ஒருவனின் வாழ்க்கையில் வந்து சேர்கிறது என்பதையும் அலசுகிறது. கூடவே சில சமயங்களில் நாம் விரும்புவது கிடைக்காமல் போவதும்கூட ஒரு அற்புதமான அதிர்ஷ்டம்’ என்று சொல்கிற காட்சிகளையும் உள்ளடக்கி தயாராகியுள்ளது.

கதைநாயகன் யோகிபாபு லக்கிமேனா இல்லையா என்பது படம் பார்த்தால் தெரியும்.

ஃபீல் குட் காமெடி சப்ஜெக்டில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. தற்போது பட வெளியீட்டுக்கு முந்தைய பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
படத்தின் தொழில்நுட்பக் குழு:
இசை: ஷான் ரோல்டன்
ஒளிப்பதிவு: சந்தீப் கே விஜய்
கலை இயக்குநர் – சரவணன் வசந்த்
படத்தொகுப்பு: ஜி.மதன்
ஒலி வடிவமைப்பாளர்: தபஸ் நாயக்
ஆடை வடிவமைப்பாளர்: நந்தினி மாறன்
நிர்வாக தயாரிப்பாளர்: கே.மதன்
தயாரிப்பு நிர்வாகி: வி.லட்சுமணன்
போஸ்டர் வடிவமைப்பு: சபா டிசைன்
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா D’One
சமூக ஊடக விளம்பரங்கள்: பாப்கார்ன்
தயாரிப்பு – திங்க் ஸ்டுடியோஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here