எம். எஸ் தோனியின் சமூக வலைதளத்தில் ‘எல். ஜி. எம்.’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் ‘எல். ஜி. எம்.’ இசையமைப்பாளரும், இயக்குநருமான ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் ஃபில் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி வரும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்’கை கிரிக்கெட் வீரர் எம். எஸ் தோனி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் விகாஸ் ஹசிஜா பேசும்போது,” ‘எல். ஜி. எம்’ சிறப்பாக உருவாகி வருகிறது. தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் பின்னணி வேலைகளைத் தொடங்கவிருக்கிறோம். தமிழ் திரையுலகில் எங்களின் சிறப்பான பயணம் தொடங்கி இருக்கிறது” என்றார்.

படத்தின் படைப்புத்திறன் நிர்வாகத் தலைவரான பிரியன்சு சோப்ரா பேசும்போது, ” எல் ஜி எம் புதுமையான உள்ளடக்கத்தை கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் பல ஆச்சரியமளிக்கும் விஷயங்கள் இடம்பெற்றிருக்கிறது. திறமை வாய்ந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர்களின் முழுமையான பங்களிப்புடன் இந்த படைப்பு உருவாகி வருகிறது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here