கிரிக்கெட் வீரர் எம். எஸ். தோனியின் நிறுவனம் தயாரிக்கும் ‘எல் ஜி எம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு! சுவாரஸ்யமான சினிமா அனுபவம் விரைவில்…

இந்திய கிரிக்கெட் வீரர் எம். எஸ். தோனி மற்றும் சாக்ஷி தோனியின் தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் ‘எல் ஜி எம்’ திரைப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர். இதற்காக படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களும் கலந்து கொண்ட பிரத்யேக நிகழ்வும் நடைபெற்றது. அப்போது படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு கலைஞர்களும் தங்களின் மகிழ்ச்சியை கொண்டாட்ட மனநிலையில் பகிர்ந்து கொண்டனர். படத்தின் பணிகள் தொடங்கப்பட்ட நாளிலிருந்து படப்பிடிப்பு நிறைவடையும் நாள் வரை முழு செயல்முறையும் விரிவான முறையில் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டிருக்கிறது.

தற்போது இறுதி கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் டீசர், ட்ரெய்லர், ஆடியோ வெளியீடு மற்றும் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும். சுவாரஸ்யமான திரைக்கதை,  உணர்வுகளும், நகைச்சுவையும் கலந்து வித்தியாசமான சினிமா அனுபவத்தை ‘எல் ஜி எம்’ பார்வையாளர்களுக்கு வழங்கவிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here