விதார்த் – ஸ்வேதா டாரதி நடிக்கும் ‘லாந்தர்’ திரைப்படம் பூஜையுடன் துவக்கம்!

விதார்த், ஸ்வேதா டாரதி, விபின், சஹானா கவுடா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கவிருக்கும் படம் ‘லாந்தர்.’ராம்குமார் இயக்கிய ‘முண்டாசுப்பட்டி’, ‘ராட்சசன்’, செல்லா அய்யாவு இயக்கிய ‘கட்டா குஸ்தி’ உள்ளிட்ட படங்களில் உதவி மற்றும் இணை இயக்குநராக பணியாற்றிய சாஜிசலீம் இந்த படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தின் துவக்கவிழா 9.6.2023 அன்று பூஜையுடன் நடந்தது.

அப்போது படம் குறித்து இயக்குநர் சாஜிசலீம் பேசியபோது, “லாந்தர் இதுவரை யாரும் கையாளாத சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகவுள்ளது. புதுமையான கதைக்களத்தில் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது” என்றார்.

திருப்பூர் தொழிலதிபர் பத்ரியின் ‘எம் சினிமா’ என்ற தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

விரைவில் கோயம்புத்தூரில் படப்பிடிப்பு தொடங்கி ஒரே கட்டமாக நடக்கவுள்ளது.இயக்குநர் சாஜிசலீம் இயக்கிய முதல் படம் ‘விடியும் வரை காத்திரு.’ இந்த படத்தின் பணிகள் நிறைவடையும் தறுவாயில் இருக்கிறது.

படக்குழுவினர்:
ஒளிப்பதிவு – ஞானசௌந்தர்
இசை – பிரவீன் (சந்தோஷ் நாராயணனிடம் உதவியாளராக பணிபுரிந்தவர்)
படத்தொகுப்பு – ஜெரோம் ஆலன்
சண்டைக் காட்சி – விக்கி
கலை இயக்கம் – தேவா
தயாரிப்பு மேற்பார்வை – ஏ ஆர் சந்திரமோகன் மக்கள் தொடர்பு -நிகில் முருகன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here