பாடம் எடுக்கும் படமாக ஜூன் 30 தியேட்டர்களுக்கு வரும் ‘லில்லி’ படத்தில் நட்பு, விட்டுக் கொடுத்தல், கூடவே ஒரு டைனோசர்!

பேபி நேஹா கதையின் நாயகியாக நடிக்க, வேதாந்த் வர்மா, பிரநதி ரெட்டி, ராஜீவ் பிள்ளை, சிவ கிருஷ்ண காரு, செந்தில் பொன்னுசாமி, ராஜ் வீர், மிட்சிலி ஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘லில்லி.’ முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான படைப்பாக உருவாகியுள்ள இந்த படத்தில் டைனோசர் ஒன்று நடிக்கிறது என்பது ஹைலைட்!

படத்தை இயக்கியுள்ள சிவம் படம் பற்றி நம்மிடம் பேசியபோது, ‘‘எத்தனையோ பெரிய நடிகர்களின், இயக்குநர்களின் படங்கள் பான் இந்தியா படமாக வெளியாகியிருக்கிறது. ஆனால், குழந்தைகளை மையமாக வைத்து நேரடியாக உருவாகியுள்ள பான் இந்திய படம் இதுவாகத்தான் இருக்கும்.

இது குழந்தைகளுக்கான படமாக இருந்தாலும் அவர்களுக்காக பெரியவர்கள் தங்கள் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதோடு நட்பு என்றால் என்ன, விட்டுக் கொடுத்தல் என்றால் என்ன என்பதை உணர்வுபூர்வமாக எடுத்துச் சொல்லும் விதத்தில் திரைக்கதை அமைத்துள்ளோம். கிளைமாக்ஸ் அனைவரையும் கண்டிப்பாக கண்கலங்க வைக்கும்.

இத்தனை ஆண்டுகால எனது சினிமா அனுபவத்தில் எத்தனையோ கதைகளை எழுதி வைத்திருக்கிறேன். ஆனால், என் முதல் படமாக இந்த குழந்தைகள் கதையைத்தான் எடுக்க வேண்டும், அவர்களது உணர்வுகளை அனைவருக்கும் சொல்லவேண்டும் என்ற எண்ணத்தில் தான் இதை எடுத்தேன்.

இதுவரை ஹாலிவுட் சினிமாவில் மட்டும் தான் டைனோசரை பார்த்து வந்தோம். முதல் முறையாக இந்த படத்தில் டைனோசரை பயன்படுத்தி இருக்கிறோம். அதுவும் ஒரு கதாபாத்திரமாகவே வரும் படத்தில் பார்க்கும்போது கதையோடு ஒன்றியிருக்கும்.

இந்த கதையையை நான் உருவாக்க முக்கியப் காரணமே இயக்குநர் மணிரத்னம் அவர்கள் தான். அவருடைய ‘அஞ்சலி’ படம் பார்த்து இன்றுவரை என்னால் அந்த படத்திலிருந்து வெளியே வரமுடியவில்லை. அந்த பாதிப்பில்தான் இந்த கதையை உருவாக்கினேன். நிச்சயம் இந்த படம் எல்லோருக்கும் பிடிக்கும். இது வெறும் குழந்தைகளுக்கான படம் மட்டுமல்ல பெரியவர்களுக்குமான படம்” என்றார்.

வரும் ஜூன் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த படத்தை கோபுரம் ஸ்டுடியோஸ் கே. பாபு ரெட்டி, ஜி.சதீஷ் குமார் இருவரும் இணைந்து தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக தயாரித்துள்ளனர்.

உருவாக்கத்தில் உறுதுணை:-
கதை, திரைக்கதை, இயக்கம் – சிவம்
தமிழ் வசனம் – இயக்குநர் முத்து
ஒளிப்பதிவு – ராஜ்குமார்
இசை – ஆண்டோ பிரான்சிஸ்
பாடல்கள் – ஆ. ப. ராசா
கலை – பி.எஸ். வர்மா
மக்கள் தொடர்பு – மதுரை செல்வம்,மணவை புவன்

‘லில்லி’ படத்தின் ஸ்டில்ஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here