வெற்றி நடிப்பில் எஸ்எஸ் ஸ்டேன்லி இயக்கத்தில் ‘லாக் டவுன் நைட்ஸ்.’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு விஜய் ஆண்டனி வாழ்த்து!

‘8 தோட்டாக்கள்’ ‘ஜிவி’, ‘பம்பர்’ உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்த வெற்றி நடிக்கும் புதிய படம் ‘லாக் டவுன் நைட்ஸ்.’

நெட்பிளிக்ஸில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட ‘பூச்சாண்டி’ படத்தில் நாயகியாக நடித்த ஹம்ஷினி பெருமாள் கதாநாயகியாக நடித்துள்ளார். இசையமைப்பாளர் கங்கை அமரன், கீர்த்தி சுரேஷ் நடித்த பென்குயின் படத்தில் வில்லனாக மிரட்டிய மதியழகன், ‘பூச்சாண்டி’ படத்தில் வில்லனாக நடித்த லோகன், கோமளா நாயுடு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘ஏப்ரல் மாதத்தில்’, ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய எஸ்.எஸ். ஸ்டேன்லி கதை, திரைக்கதை எழுதி இந்த படத்தை இயக்குகிறார். படத்தின் காட்சிகள் முழுவதும் மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளன. ‘அன்னக்கொடி’, ‘மீண்டும் ஒரு மரியாதை’ உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சாலை சகாதேவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் சேதுபதி நடித்த ‘பண்ணையாரும் பத்தமினியும்’ படம் மூலம் பிரபலமான இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். பாடல்களை சிநேகன், சாரதி எழுதியிருக்கிறார்கள். ‘அசுரன்’, ‘விடுதலை’, ‘டிரைவர் ஜமுனா’ உள்ளிட்ட படங்களின் வெற்றிப் படங்களின் எடிட்டர் ராமர் ஆர் எடிட்டிங் செய்கிறார்.

இந்த படத்தின் டைட்டில் லுக்கை இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி வெளியிட்டார். அது தற்போது இணைய தளங்களில் பெரியளவில் வரவேற்பை பெற்று வருகிறது.

ஷாம் நடிப்பில் முழுக்க முழுக்க அமெரிக்காவிலுள்ள லாஸ்வேகாஸில் படமாக்கப்பட்டு வெளியான ‘காவியன்’ படத்தை தயாரித்த ‘2 M சினிமா’ வினோத் சபரீஷ் இந்த படத்தை பிரமாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ளார். மட்டுமல்லாது கிஷோர், பூஜா காந்தி நடிப்பில் உருவாகிவரும் ‘சம்ஹரிணி’ என்ற கன்னட படத்தையும் பிரமாண்டமாகத் தயாரித்துள்ளார். அந்த படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

உருவாக்கத்தில் உறுதுணை:-

இணை தயாரிப்பு – ‘அர்த்தனாஸ் டிரேடிங்’ சுபாஸ் வி எஸ்
ஸ்டில்ஸ் – சுரேஷ் மெர்லின்
மக்கள் தொடர்பு – மணவை புவன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here