ஜெய், தான்யா ஹோப் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள வெப் சீரிஸ் ‘லேபில்.’
இந்த வெப் சீரிஸில் மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண்ராஜ், ஸ்ரீமன், இளவரசு, சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
பிரபல இயக்குநர் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் திரைக்கதை எழுதி, இயக்கியுள்ளார். அவருடைய முதல் வெப் சீரிஸ் இது. கூடுதல் திரைக்கதை, வசனங்களை ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுதியுள்ளார்.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திற்காக தயாராகும் இந்த வெப் சீரிஸின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
முன்னதாக வெளியான இந்த சீரிஸின் ஃபர்ஸ்ட்லுக் ரசிகர்களிடம் மிகப்பெரும்
வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர், பெரும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.
யுகபாரதி, மோகன் ராஜா, லோகன் மற்றும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் என நான்கு பாடலாசிரியர்கள் இந்த சீரிஸுக்கு பாடல்களை எழுதியுள்ளனர். நடன அமைப்பை அசார் மேற்கொள்ள, சண்டைக்காட்சிகளை சக்தி சரவணன் அமைத்துள்ளார்.
இந்த சீரிஸை, முத்தமிழ் படைப்பகம் தயாரித்துள்ளனர். இசையை சாம் சி எஸ் கையாண்டுள்ளார். ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் செய்துள்ளார். B.ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பாளராகவும், வினோத் ராஜ்குமார் கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர்.