ஜெய், தன்யா ஹோப் நடித்துள்ள ‘லேபில்’ வெப் சீரிஸ் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நவம்பர் 10-ம் தேதி ரிலீஸ்!

ஜெய், தன்யா ஹோப் நடித்துள்ள வெப் சீரிஸ் ‘லேபில்.’ மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு, சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இது வித்தியாசமான களங்களில், அழுத்தமான படைப்புகளை வழங்கி வரும், இயக்குநர் அருண்ராஜா இயக்கும் முதல் வெப் சீரிஸ் என்பதால், ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. திரைக்கதையையும் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்களை ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுதியுள்ளார்.

சமீபத்தில் வெளியான இந்த சீரிஸின் டிரெய்லர் ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்களை குவித்திருப்பதுடன், பொது பார்வையாளர்களிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அதையடுத்து இந்த வெப் சீரிஸ் வரும் நவம்பர் 10, 2023 முதல் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.

லேபில் சீரிஸை முத்தமிழ் படைப்பகம் தயாரித்துள்ளது. யுகபாரதி, மோகன் ராஜா, லோகன் மற்றும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் உட்பட நான்கு பாடலாசிரியர்கள் பாடல்களை எழுதியுள்ளனர்.

சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் செய்துள்ளார். பி.ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பாளராகவும், வினோத் ராஜ்குமார் கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர். நடன அமைப்பை அசார் மேற்கொள்ள, சண்டைக்காட்சிகளை சக்தி சரவணன் அமைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here