விக்னேஷ் சிவன் இயக்கத்தில், ‘லவ் டுடே’ பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘எல் ஐ சி’ படத்தை ‘செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ’ லலித்குமார் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறார். எஸ்ஜே சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படத்தின் துவக்கவிழா பூஜையில், இயக்குநர் விக்னேஷ் சிவன், ராக்ஸ்டார் அனிருத், பிரதீப் ரங்கநாதன், நாயகி கிரித்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா, தயாரிப்பாளர் லலித்குமார், இணைத் தயாரிப்பாளர் எல்கே விஷ்ணுகுமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இந்த படம் இன்றைய இளைய தலைமுறையினரை பிரதிபலிக்கும் வகையில், புதுவிதமான காதலைச் சொல்லும் ரொமான்ஸ் காமெடி படமாக, அனைவரையும் கவரும் கமர்ஷியல் படைப்பாக உருவாகிறது.
கலக்கலான காதல் காமெடிப் படங்களுக்கு பெயர் பெற்ற விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணி இப்படத்தில் இணைந்திருப்பது, ரசிகர்கள் மத்தியில் இப்போதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
படத்துக்கு ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரதீப் இ ராகவ் எடிட்டிங் செய்கிறார். உடை வடிவமைப்பை பிரவீன் ராஜா செய்கிறார்.