Home சினிமா பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ செப்டம்பர் 18-ம் தேதி ரிலீஸ்!

பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ செப்டம்பர் 18-ம் தேதி ரிலீஸ்!

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (Love Insurance Kompany) திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 18-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இந்த படத்தில் கிருத்தி ஷெட்டி , எஸ். ஜே. சூர்யா, யோகி பாபு, கௌரி கிஷன், ஷா ரா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் செந்தமிழன் சீமான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் வெளியாகி 33 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

விரைவில் படத்தின் பாடல்கள், டீசர், டிரெய்லர், ஸ்னீக் பிக் ஆகியவை அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் முதல் பாடல் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களின் வரவேற்பினை பெற்றிருப்பதாலும் இப்படத்தின் பாடல்களுக்கும் படத்திற்கும் ரசிகர்களிடத்திலும், திரையுலகினரிடத்திலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்