நடிகர் ஆர்.லஷ்மணன் வந்தவாசியில் பிறந்தவர். சிறுவயதிலேயே கலைகளின் மேல் ஆர்வம் உண்டு. பாடம் படிப்பதை விட நூலகத்தில் உள்ள புத்தகங்களை படித்து கரைத்து குடித்தவர். ஜெயகாந்தன் முதல் தற்போதைய ஜெயமோகன் வரை அறிந்தவர்.கதை கவிதை கட்டுரை என எல்லா தளங்களிலும் இலக்கிய அறிவை மேம்படுத்தியவர்.
சிறுவயதிலேயே பள்ளி, மேடை நாடகங்களில் நடித்தும் கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டிகளில் கலந்துகொண்டும் பல பரிசுகளை பெற்றவர். வீட்டை நிறைக்கும் அளவுக்கும் சிறுவயது முதல் கல்லூரி வரை பல பரிசுகளை பெற்றவர்.
எம்ஜிஆர், சிவாஜி என எல்லா நடிகர்களின் படங்களையும் பார்த்து விடுவார். எல்லோரும் இவரைப் பார்த்தவுடன் விஜயகாந்த் மாதிரி இருக்கே, சினிமாவுக்குப் போ என சொல்ல ஆரம்பித்தனர். ஆனால் இவர் கொண்ட கொள்கையில் உறுதியோடு இருந்தார். பெற்றோர் விருப்பத்திற்காக பி இ முடித்து வேலை பார்த்துக்கொண்டே சினிமா தேடலை துவங்கினார். பல குறும்படங்களில் நடித்து பாராட்டு வாங்கியதோடு மட்டுமல்லாமல் சில குறும்படங்களை தயாரித்துள்ளார்.
ஓரே சமயத்தில் இரண்டு படங்களை தயாரிக்கும் அளவுக்கு பொருளாதாரத்தை உயர்த்தி உள்ளார். சுந்தரம் என்கிற படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். வெளிநாடுகளில் மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் என பல பகுதிகளில் படமாக்கப்பட்டது.
2026 என்கிற படத்தை சயின்ஸ் ஃபிக்சன் படத்தை உருவாக்கியுள்ளார். படத்தின் ஆரம்ப கட்ட வேலைகள் நடைபெறுகிறது.
தன் நண்பர்களான ராக் & ரோல் புரொடக்சன்ஸ் சேர்ந்து வாங்கண்ணா வணக்கங்கன்னா என்கிற படத்தை இணை தயாரிப்பாளராக ஏ.பி.புரொடக்சன்ஸ் சார்பில் மணிமேகலை லட்சுமணன் படத்தை தயாரித்துள்ளார். படம் சிறப்பாக வந்துள்ளது. படத்தில் நடித்த அனைவரும் நன்கு ஓத்துழைத்துள்ளனர். நடிகர் செந்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.நடிகர் சுந்தர் மகாஸ்ரீ மிக நன்றாக நடித்துள்ளார். இயக்குனர் ராஜ் கண்ணாயிரம் சிறப்பாக இயக்கியுள்ளார்.
படத்திற்கு நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் நல்ல ஓத்துழைப்பு தந்துள்ளனர். இப்படத்தில் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளேன். பல படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடக்கிறது.அடுத்தடுத்த படங்களில் பெரிய திரையில் விரைவில் என்னைப் பார்க்கலாம்
எழுத்து, இயக்கம் – ராஜ் கண்ணாயிரம், கதை, திரைக்கதை, வசனம் – சுந்தர் சுந்தர் மகாஸ்ரீ, ஒளிப்பதிவு – வெங்கட் முனிரத்னம், ஏ சி மணிகண்டன், ஸ்ரீநாத். படத்தொகுப்பு – ரமேஷ் மணி, இசை – ஜோஸப் சந்திரசேகர், நடனம் -ராஜ் கிரண் ,மாதவன் ,விஷ்ணு ராஜ்,தயாரிப்பு -யாஸ்மீன் பேகம்,மணிமேகலை லட்சுமணன்
ஒலிப்பதிவு – சதீஷ் சாந்திவாசன், மக்கள் தொடர்பு – பா. சிவக்குமார்