லெனின் பாண்டியன் பட ஹீரோ நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசனுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன் நடிப்பில், டி. டி. பாலச்சந்திரன் இயக்கியுள்ள ‘லெனின் பாண்டியன்’ திரைப்படம் அனைவரும் எதிர்பார்க்கும் படைப்பாக உருவாகியுள்ளது.

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகன் தர்சன் கணேசனுக்கு தனது வாழ்த்துகளை வழங்கினார். அந்த சந்திப்பில் சத்ய ஜோதி பிலிம்ஸ் டி. ஜி. தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன், சிவாஜியின் மகன் ராம் குமார் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

படத்தில் தமிழ் திரைப்பட உலகின் பன்முக திறமையாளர் கங்கை அமரன் நடித்துள்ளார். நடிகை மற்றும் அரசியல்வாதியான ரோஜா நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் தமிழ்த் திரையுலகில் திரும்பி வருகிறார். ஷ்ரீதா ராவ், ஆடுகளம் நரேன், யுகேந்திரன், போஸ் வெங்கட், ஜார்ஜ் மரியன், அர்ச்சனா, மற்றும் சுப்பு பஞ்சு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

திரைப்படத்தின் இசையை திறமையான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உருவாக்குகிறார். ஒளிப்பதிவை ஏ. எம். எட்வின் சக்காய் கவனிக்க, தொகுப்பை நாகூரான் ராமச்சந்திரன் மேற்கொள்கிறார். கலை இயக்கத்துக்கு ஆத்தூரி ஜேகுமார், ஆக்‌ஷன் காட்சிகளுக்காக கலைமாமணி தளபதி தினேஷ், மற்றும் நடன வடிவமைப்புக்கு விஜயா மாஸ்டர் பொறுப்பேற்றுள்ளனர். படத்தின் பி.ஆர். நடவடிக்கைகளை சதீஷ் (AIM) மேற்கொள்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here