‘அதிர்ஷ்டம் எப்போது வேண்டுமானாலும் வரும்; எப்படி வேண்டுமானாலும் வரும்’ என்பதை சொல்லும் கதைக்களத்தில் ‘லக்கிமேன்.’
ரியல் எஸ்டேட் பிசினஸில் கமிஷன் புரோக்கராக இருக்கும் யோகிபாபுவின் வாழ்க்கையில் திடுதிப்பென யோகம் அடிக்கிறது; கார் ஒன்று பரிசாக கிடைக்கிறது. எளிமையான அவர் வீட்டில் காரை நிறுத்த இடமில்லாமல் வெவ்வேறு இடங்களில் நிறுத்துகிற சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார். கூடவே அந்த பகுதி போலீஸ் உயரதிகாரியுடன் சின்னச் சின்ன மோதல் உருவாகி பகையாக மாறிப் போகிறது. அப்படியான சிக்கல் சிரமங்களைத் தாண்டி கார் வந்த நேரம் பிஸினஸில் லாபம் கூடுகிறது. அதிர்ஷ்டக் காற்று வீசுகிறது. கொஞ்ச நாட்களிலேயே அந்த மகிழ்ச்சியை அனுபவிக்க முடியாமல் அதே காரால் வாழ்க்கையில் துரதிஷ்டக் காற்று தாக்குகிறது. அதிலிருந்து மீள அந்த எளிய மனிதன் படுகிற பாடும் சந்திக்கிற சவாலுமே கதையோட்டம்… இயக்கம் பாலாஜி வேணுகோபால்
மனைவி, மகன் என எளிய குடும்பத்தின் தலைவன்; குறைவான வருமானத்திலும் வாழ்நாளை நல்லபடி நகர்த்துகிறவன்… பரிசாக கார் கிடைத்தபின் அதன் மூலம் கிடைக்கிற சந்தோஷத்தை குடும்பத்தோடு சேர்ந்து உற்சாகமாக அனுபவிக்கிறவன்… கார் கைவிட்டுப் போய்விட்ட சூழலில் அதற்கு காரணமாக போலீஸ் உயரதிகாரியுடன் தன்னால் முடிந்தவரை துணிச்சலாக மோதுகிறவன், அந்த போலீஸுக்கு பாடம் கற்பிக்கத் திட்டமிட்டு நிறைவேற்றுகிறவன் என காட்சிக்கு காட்சி அலட்டலற்ற நடிப்பால் மனம் கவர்கிறார் யோகிபாபு.
‘கடைசி விவசாயி’ படத்தில் நீதிபதியாகவும், ‘குட்நைட்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து கவனம் ஈர்த்த ரேச்சல் ரேபேக்கா இந்த படத்தில் கதைநாயகனின் கச்சிதமான மனைவி. பாதியாய் உடைபட்ட வாட்டர் டேங்கை நீதிமன்ற சாட்சிக் கூண்டுபோல் நினைத்து அதில் கணவனை நிற்க வைத்து கருத்துப் பரிமாற்றம் நிகழ்த்துவது; பரிசாக கிடைத்த கார் மூலம் ஏற்படும் சிக்கல்களால் கணவன் மீது சீறிப் பாய்வது என தருணங்களுக்கேற்ற தரமான நடிப்பால் ஈர்க்கிறார்.
நண்பன் யோகிபாபுவின் ஏடாகூடமான நடவடிக்கைகளிலும் எக்குத்தப்பான செயல்பாடுகளிலும் சிக்கிக் கொண்டு அவதிப்படும் காட்சிகளில் தனது அப்பாவித்தனத்தால் ரசிக்க வைக்கிறார் அப்துல்.
காவல்துறை உயரதிகாரியாக வீரா. நேர்மையானவர், என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் என்றெல்லாம் அவருக்கு ஏகப்பட்ட பில்டப் தருகிறார்கள். ஆனால், அவரோ ‘பேனாவை திருடிட்டான் சார்’, ‘பென்சிலால் குத்திட்டான் மிஸ்’ என்கிற ஸ்கூல் பிள்ளைகள் லெவலில் சாமானியன் யோகிபாபுவை சீண்டிக் கொண்டிருக்கிறார். அவரது கதாபாத்திரம் எரிச்சல் தரும்படி உருவாக்கப் பட்டிருந்தாலும் அந்த ஓங்கி வளர்ந்த மனிதர் நடிப்பில் குறைவைக்கவில்லை.
யோகிபாபுக்கு கார் டிரைவிங் கற்றுத் தரும் நிறுவனத்தின் பெயர் கதைநாயகனின் மகனாக வருகிற அந்த சிறுவனின் இயல்பான நடிப்பும் பலம் சேர்த்திருக்கிறது.ஃபார்முலா 1′ என்றிருப்பதும், பயிற்சியாளராக வரும் எஸ்.ஆர். சிவாஜி அடிக்கும் சிலநிமிட லூட்டியும் கலகலப்பு!
கதைநாயகனின் மகனாக வருகிற அந்த சிறுவனின் இயல்பான நடிப்பும் பலம் சேர்த்திருக்கிறது.
கதைநாயகனின் மகனாக வருகிற அந்த சிறுவனின் இயல்பான நடிப்பும் பலம் சேர்த்திருக்கிறது.
கதைநாயகனின் மகனாக வருகிற அந்த சிறுவனின் இயல்பான நடிப்பும் பலம் சேர்த்திருக்கிறது.
‘நல்லவனா இருந்தா கடைசிவரை நல்லவனாத்தான் இருக்கணும்; நல்லாவே இருக்க முடியாது’ என்பதுபோல் படம் நெடுக வந்து விழுகின்றன கருத்தாழமிக்க வசனங்கள்.
ரியல் எஸ்டேட் அதிபராக அமித் பார்கவின் நடிப்பும் நேர்த்தி.
இசையில் ‘எதுதான் சந்தோஷம்’ பாடலின் உற்சாகமாக கடந்துபோக ‘தொட்டுத் தவழும் தென்றலே’ பாடல் இதமாக தாலாட்டுகிறது.