‘ருத்ரமாம்பாபுரம்’ (தெலுங்கு) சினிமா விமர்சனம்

மீனவரான ஷிவய்யா ருத்ரமாம்பாபுரத்தில் முக்கிய புள்ளியாவார். அவருக்கும் பக்கத்து ஊரை சேர்ந்த திருப்பதி என்பவருக்கும் நீண்ட நாள் பகை இருக்கிறது.

திருப்பதியின் மகன் சீனய்யா கடல்வாழ் உயிரனங்களை பற்றிய படிப்பை படித்து வருபவர். இயற்கை வளங்களை அழிக்க நினைப்பவர்களுக்கு எதிராக களத்தில் போராடுபவர். அதே கல்லூரியில் படித்து வரும் MLA வின் சகோதரர் மகள் சீனய்யாவை விரும்புகிறார்.

இந்த நிலையில் MLA திருப்பதியை தனது பகடைக்காயாக பயன்படுத்தி இரு பிரிவு மீனவர்களுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்துகிறார்.

கடல் வாழ் உயிரினங்களை அழிக்கும் Ring Net ஐ திருப்பதியின் ஆட்கள் பயன்படுத்துகிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஷிவய்யா MLA விடம் முறையிட அவர் சட்டம் இயற்றுவதாக சொல்லி காலதாமதம் செய்கிறார். இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஷிவய்யாவின் ஊரை சேர்ந்தவர்கள் பிழைப்பிற்காக வேறு ஊருக்கு செல்கின்றனர்.

தன்னுடைய படிப்பை முடித்து ஊருக்கு வரும் சீனய்யா ஊரினுடைய நிலை மாறியதையும் இதற்கு காரணம் தனது தந்தை என்பதையும் அறிகிறார்.

தன்னுடைய ஊரின் நிலையை சீனய்யா மாற்றினாரா திருப்பதிக்கும் ஷிவய்யாவிற்கும் இடையேயான பகை முடிவுக்கு வந்ததா இருவருக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன MLA வின் உண்மை முகத்தை திருப்பதி அறிந்தாரா சீனய்யாவின் காதல் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

திருப்பதியாக அஜய் கோஷ் இதுவரை எதிர்மறை மற்றும் Supportive கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் இந்த படத்தில் வித்தியாசமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.

திருப்பதி என்கிற முக்கிய பாத்திரத்தில் வியாபாரியாக,விசுவாசியாக மற்றும் பாசமுள்ள தந்தையாக நிறைவாக செய்துள்ளார். இந்த படத்தின் கதையையும் அஜய் கோஷ் எழுதியுள்ளார்.

ஷிவய்யாவாக நடித்துள்ள Rajasekar Aningi பாத்திரத்திற்கேற்ற நடிப்பை வெளிப்படுத்தி நிறைவாக செய்துள்ளார்.

சீனய்யாவாக வரும் அர்ஜூன் ரெட்டியின் நடிப்பில் குறையில்லை. நாயகிக்கு அதிக வேலையில்லை. படத்தில் நடித்துள்ள பிற கலைஞர்கள் தங்களது பங்களிப்பை சிறந்த முறையில் கொடுத்துள்ளனர்.

விறுவிறுப்பான திரைக்கதை எந்த படத்திற்கும் அவசியம். ஆனால் இந்த படத்தில் அது மிஸ்ஸிங். அஜய் கோஷின் கதையை கவனத்துடன் இயக்குவதில் இயக்குனர் தவறி விட்டார்.

பின்னணி இசையும் ஒளிப்பதிவும் சுமார் ரகம். பிரபலமான நடிகர்கள் இல்லாதது படத்திற்கு மிகப்பெரிய பலவீனம். சீனய்யாவின் காதல் காட்சிகளும் செயற்கையாக உள்ளது.

மொத்தத்தில் சுமாராக உள்ள இந்த படத்தை விருப்பமுள்ளவர்கள் Hotstar-ல் காணலாம்.

Vasudevan Srirangarajan (Madhyamar)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here