‘குட்நைட்’ பட ஹீரோ நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை துவங்கி வைத்த நடிகர் விஜய் சேதுபதி!

கதையம்சம் கவரும்படி இருந்தால் சிறிய படங்களும் வெற்றி பெறும் என்பதற்கு சான்றாக சமீபத்தில் வெளிவந்து ஹிட்டடித்த படம் ‘குட்நைட்.’
பெரிய ஹீரோக்களின் படங்கள் மட்டுமே தியேட்டர்களில் பெரியளவில் வசூல் செய்யும் என்பதை மாற்றி, விமர்சன ரீதியான வரவேற்போடு, நல்ல வசூலையும் பெற்று தமிழ் சினிமாவுக்கு நம்பிக்கையூட்டும் படமாக அமைந்தது.

அந்த படத்தைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி எண்டர்டெயின்மெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் அடுத்த படம் தயாராகிறது.

இந்த படத்திலும் ஒரு புது இயக்குநர் அறிமுகமாகிறார். பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கும் இந்த  படத்தில் குட்நைட் மணிகண்டனே கதாநாயகனாக நடிக்கிறார். மாடர்ன் லவ் புகழ் ஸ்ரீகெளரி பிரியா கதாநாயகியாக நடிக்கிறார். கண்ணாரவி முக்கியவேடத்தில் நடிக்கிறார்.

சென்னை மற்றும் கோவா அருகேயுள்ள கோகர்ணா ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
சமீபத்தில் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. முதல்நாள் படப்பிடிப்பை கிளாப் அடித்துத் தொடங்கிவைத்தார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இப்போது படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுவருகிறது.

படம் குறித்து இயக்குநரிடம் கேட்டபோது ‘‘இது தற்காலக் காதல் அதில் நடக்கும்  நிகழ்வுகள் பற்றிய விவாதத்தை சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் சொல்லக்கூடிய படமாக இருக்கும்” என்றார்.

இசை ஷான் ரோல்டன், ஒளிப்பதிவு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா,படத்தொகுப்பு பரத் விக்ரமன், கலை ராஜ்கமல் பாடல்கள் மோகன்ராஜன் என வலிமையான கூட்டணி அமைந்துள்ளது.
தயாரிப்பு – நசரேத் பசிலியான், மகேஷ்ராஜ் பசிலியான், யுவராஜ் கணேசன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here