முன்னணி ஓடிடி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ‘மாஸ்டர்ஃபீஸ்’ என்கிற மலையாள வெப் சீரிஸின் டீசரை வெளியிட்டுள்ளது.
டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் 2-வது மலையாள வெப் சீரிஸ் இது.
இந்த சீரிஸில் நித்யா மேனன், ஷரஃப் யூ தீன், ரெஞ்சி பணிக்கர், மாலா பார்வதி, அசோகன், சாந்தி கிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஸ்ரீஜித் என் இயக்கியுள்ளார்.
இந்த சீரிஸ் நகைச்சுவை கலந்த உணர்வுப்பூர்வமான டிராமாவாக, சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினரையும் கவர்ந்திழுக்கும் ஃபேமிலி எண்டர்டெயினராக இருக்கும் என நம்பிக்கை தருகிறது டீசர்.
மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி உள்ளிட்ட மொழிகளில் ஸ்ட்ரீமாகவுள்ளது.
சீரிஸை ‘சென்ட்ரல் அட்வர்டைசிங்’ மேத்யூ ஜார்ஜ் தயாரித்துள்ளார். சீரிஸ் வெளியீட்டு தேதி உள்ளிட்ட மற்ற தகவல்கள் அடுத்தடுத்து வெளிவரும்.