‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிக்கும் புதிய படத்திற்கு தற்காலிகமாக ‘மெகா 157‘ (#Mega157) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம் பற்றிய அறிவிப்பை சிரஞ்சீவியின் பிறந்தநாளன்று படத்தை தயாரிக்கும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டது. வசிஷ்டா இயக்கத்தில், மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கப்படுகிறது இந்த படம்.
இயற்கையின் ஐந்து கூறுகளை காட்டும் விதத்திலான இந்த படத்தின் அறிவிப்பு போஸ்டர் சமூக ஊடகங்களிலும், இணையத்திலும் பெரும் அதிர்வை உருவாக்கி வருகிறது.
இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகளை துவங்குவதாக படத்தின் இயக்குநர் வசிஷ்டா அறிவித்துள்ளார். சோட்டா கே நாயுடு ஒளிப்பதிவு செய்வார் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
மெகா படத்திற்கு ஒரு மெகா தொடக்கம் 🌟#MEGA157 ப்ரீ புரொடக்ஷன் பணிகளைத் தொடங்குகிறோம்! விரைவில் உங்கள் அனைவரையும் ஒரு சினிமா சாகசத்திற்கு அழைத்துச் செல்லவுள்ளோம்’ என்று இயக்குநர் வசிஷ்டா ட்வீட் செய்துள்ளார். கூடவே அவர் மெகாஸ்டார் சிரஞ்சீவி, தயாரிப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளருடன் இணைந்த ஒரு பிரத்யேக புகைப்படத்தையும் டிவிட்டுடன் பகிர்ந்துள்ளார்.
படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் தெரியவரும்.
உருவாக்கத்தில் உறுதுணை:-
எழுத்து & இயக்கம்: வசிஷ்டா
தயாரிப்பாளர்கள்: வம்சி, பிரமோத், விக்ரம்
தயாரிப்பு நிறுவனம்: யு வி கிரியேஷன்ஸ்.
ஒளிப்பதிவு: சோட்டா கே நாயுடு